காதல், பெற்றோர் எதிர்ப்பு.!! திருமணம் முடிந்தது, ஆதரவற்ற நிலை,
 • காதல், பெற்றோர் எதிர்ப்பு.!! திருமணம் முடிந்தது, ஆதரவற்ற நிலை,

  சென்னை மதுரவாயல் இராஜிவ்காந்தி நகரை சார்ந்தவர் பிரகாஷ் (27). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரகாஷின் மனைவியின் பெயர் காயத்ரி (25). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

  இவர்கள் இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில்., கடந்த வருடம் இவர்களின் காதலை இருவரின் இல்லத்திலும் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

  கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வேலை நிமித்தமாக பிரகாஷ் மும்பைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து காயத்ரியிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவந்துள்ளார்.

  இந்நிலையில்., நேற்று இரவு மனைவிக்கு நீண்ட நேரமாக அலைபேசியில் தொடர்பு கொண்டும் மனைவி அலைபேசியை எடுக்காததால்., அக்கம்பக்கத்தினரிடம் தொடர்புகொண்டு மனைவியை வீட்டில் சென்று உள்ளாரா? என்று சோதிக்குமாறு கேட்டுள்ளார்.

  இதனை அறிந்த பக்கத்துக்கு வீட்டார்., இவரின் இல்லத்திற்கு சென்று நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவரிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லாததும்., கதவு உள்பக்கமாக தாளிட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.

  தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டினுள் சென்றனர். அப்போது காயத்ரி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

  அவரின் உடலை மீட்ட காவல் துறையினர் சம்பவம் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

  இந்த சம்பவம் குறித்து காயத்ரியின் கணவரான பிரகாசுக்கும் தகவல் வழங்கப்பட்டு அவரும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார். பின்னர் பிரகாஷ் மற்றும் அவரின் பக்கத்து வீட்டினரிடம் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டனர்.

  அந்த விசாரணையில்., இவர்களின் காதலுக்கு இருவரின் இல்லத்திலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதும்., இதனால் இருவரின் இல்லத்தில் இருந்தும் ஆதரவின்றி தவித்து வந்ததும் தெரிய வந்தது.

  மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால்., கடும் மனஉளைச்சலில் காயத்ரி இருந்துவந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற முடிவுகள் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  இருந்தாலும்., தற்கொலை செய்ததற்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் திருமணம் முடிந்த ஒரு வருடமே ஆவதால்., அம்பத்தூர் வடடாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
வினோத நிகழ்வுகள்
விவசாயத் தகவல்கள்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort