தம்பதிகளே இதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்,
 • தம்பதிகளே இதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்,

  ஆனந்தவேதம் - தாம்பத்தியம் !ராதேக்ருஷ்ணா தாம்பத்தியம் ஒரு வரப்ரசாதம் ! தாம்பத்யம் ! பகவானும்,தாயாரும் கூட  திவ்ய தம்பதிகளாகவே

  காட்சி தருகின்றனர் ! தாம்பத்தியத்தினால்தான் உலகில் சந்ததி உண்டாகிறது ! ப்ரும்மசரியத்தைக் காட்டிலும், வானப்ரஸ்தத்தைக் காட்டிலும், சன்யாசத்தைக் காட்டிலும், க்ருஹஸ்த தர்மமே மிக உயர்ந்தது ! தாம்பத்தியத்தில் தெய்வீகத்தை உணரவேண்டும் ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் பரமானந்தமே ! தாம்பத்தியத்தின் லக்ஷியம் தெய்வ தரிசனமே ! தாம்பத்தியத்தை நல்லபடி நடத்தினால் வீட்டிலேயே தெய்வத்தைப் பார்க்கலாம் . . .

  அதற்கு என்ன செய்ய வேண்டும் ? ? ?
  அதற்கு விரோதமானவை என்ன ? ? ?

   தம்பதிகளே கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் . . . அவரவர் ப்ராரப்தத்திற்கு தகுந்தவாறே கணவனும், மனைவியும் அமைகின்றனர் ! ஆனால் உன்னதமான பக்தியினால் பூர்வ ஜன்ம கர்ம வினையை மாற்றி நிம்மதியான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியும் !

  எது எப்படியோ உனக்கென்று ஒரு வாழ்க்கையை பகவான் கொடுத்திருக்கிறான் ! அதை முதலில் புரிந்துகொள் !

  உலகில் கல்யாணம் என்கின்ற ஒன்று நடக்காமல் பரிதவிப்பவர்கள் பலர் உண்டு !

  கல்யாணம் ஆனபிறகும் தன் ஜோடியை இழந்து தவிப்பவர்கள்
  பல கோடி உண்டு !

  இருப்பதை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டியது
  மனித தர்மம் . . .

  1. கணவனை மனைவி க்ருஷ்ணனின் ப்ரசாதமாக நினைக்க வேண்டும் ! மனைவியை கணவன் க்ருஷ்ணனின் ப்ரசாதமாக
  ஏற்றுக்கொள்ள வேண்டும் !

  2. கணவனிடத்தில் உள்ள உயர்ந்த குணங்களை மனைவி
  புரிந்துகொள்ள வேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள உயர்ந்த
  பண்புகளை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும் !

  3. கணவனிடத்தில் உள்ள குறைகளை மனைவி தெரிந்துகொண்டு அதை மாற்ற விடா முயற்சி எடுக்கவேண்டும் ! மனைவியிடத்தில் உள்ள குறைகளை கணவன் புரிந்துகொண்டு அதிலிருந்து
  அவளை மீட்கவேண்டும் !

  4. கணவன் மனைவியை அடுத்தவர் முன் அவமானப்படுத்தவே கூடாது ! மனைவி கணவனைப்பற்றி அடுத்தவரிடம் மறந்தும்
  கேவலமாகப் பேசவே கூடாது !

  5. கணவன் குடும்பத்திற்கு வேண்டியதை சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் ! மனைவி கணவனின் சம்பாத்யத்திற்குத் தகுந்தபடி குடும்பத்தை நடத்தவேண்டும் !

  6. கணவனை மனைவி ஆத்மாவாக பார்க்கவேண்டும் ! மனைவியை கணவன் ஆத்மாவாக உணரவேண்டும் !

  7. கணவனின் தர்ம காரியங்களுக்கு மனைவி என்றுமே
  உறுதுணையாக இருக்க வேண்டும் ! கணவன் என்றுமே
  மனைவியை தர்மகாரியங்களில் ஈடுபடுத்தவேண்டும் !

  8. எந்த ஒரு நிலைமையிலும், கணவன் மனைவியை அடிமையாக நினைக்கவே கூடாது ! எந்த ஒரு அவசரத்திலும், மனைவி கணவனை கேவலமாக நினைக்கவே கூடாது !

  9. கணவனிடத்தில் மனைவி எப்பொழுதும் உண்மையாகவே
  இருக்கவேண்டும் ! மனைவியிடத்தில் கணவன்
  எப்பொழுதும் ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும் !

  10. கணவனின் பலம்,பலவீனம்,தேவை,  ஆகியவற்றை மனைவி
  நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் ! மனைவியின் மனம்,தவிப்பு,தேவைகள் ஆகியவற்றிற்கு கணவன்
  மரியாதை அளிக்கவேண்டும் !

  11. மனைவியை கணவன் காமப்பொருளாக மட்டும் பார்க்காமல்
  அவள் சரீரத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் ! கணவனை மனைவி தன் ஆசைகளை பூர்த்தி செய்யும் ஒரு இயந்திரமாகப் பார்க்காமல், அவனுடன் தோள் கொடுத்து நிற்கவேண்டும் !

  12. மனைவியின் முட்டாள்தனங்களையோ, குறைகளையோ,உடல் அழகைப்பற்றியோ, தவறுகளையோ, கணவன் மறந்தும்
  அடுத்தவரிடம் வெளியிடக்கூடாது ! கணவனின் அசட்டுத்தனங்களையோ, நஷ்டங்களையோ,கெட்ட குணங்களையோ, மனைவி ஒரு நாளும் மற்றவரிடம்
  கலந்து பேசவே கூடாது !

  13. எந்த சமயத்திலும் கணவன் மனைவியை தள்ளி வைத்துவிடலாம்
  என்று தீர்மானிக்கவே கூடாது ! மனைவி எந்த நிலைமையிலும்
  கணவன் தனக்கு அவசியமில்லையென்றோ, விலகலாம் என்றோ யோசிக்கவே கூடாது !

  14. ஒரு பொழுதுகூட மனைவி, இவனை கணவனாக அடைந்துவிட்டோமே என்று நினைக்கவே கூடாது ! ஒரு தடவை கூட,கணவன், இவளை விட நல்ல மனைவி கிடைத்திருந்தால்
  நன்றாக இருந்திருக்கும் என்று யோசிக்கவே கூடாது !

  15. என்றும் மனைவி அடுத்தவரின் கணவரோடு தன் கணவனை
  ஒப்பிட்டு நினைக்கவே கூடாது ! என்றும் கணவன் மற்றவரின்
  மனைவியை, தன் மனைவியோடு ஒப்பிட்டு பார்க்கவே கூடாது !

  16. கணவனின் குடும்பத்தை மனைவி தன் குடும்பமாக
  பாவித்து சேவை செய்யவேண்டும் ! மனைவியின் குடும்பத்தை
  கணவன் தன்னுடையவர்களாகக் கருதி மரியாதையுடன் நடத்தவேண்டும் !

  16. மனைவியின் உடல்நலத்தில் கணவன் என்றுமே அக்கரை உடையவனாக இருக்கவேண்டும் ! கணவனின் உடல்நலத்தில் மனைவி எப்பொழுதும் அக்கரையுடன் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும் !

  17. மனைவியானவள் கணவன் சொல்வதை
  சரியாகப் புரிந்துகொண்டு, அதன்படி நடக்க வேண்டும்.
  கணவனானவன் மனைவி சொல்லும் காரியங்களில் யோசனை செய்து, தகுந்தபடி செயல்படவேண்டும் .

  18. மனைவி கணவனுக்கு ஒரு உத்தமமான மந்திரியைப் போல்
  ஆலோசனை சொல்லவேண்டும் . கணவன் மனைவியை ஒரு தோழியாக, நலம் விரும்பியாக, குழந்தையாக பாவித்து
  அவளுக்கு நல்லவற்றை சொல்லவேண்டும் !

  19. என்றுமே மனைவி மலர்ச்சியான முகத்தோடு கணவனுக்கு பணிவிடை செய்யவேண்டும் ! என்றுமே கணவன் ஆனந்தமான
  வார்த்தைகளால் மனைவிக்கு அன்பைத் தரவேண்டும் !

  20. கணவன் மனைவியின் உடல் தேவைகளை புரிந்துகொண்டு
  அதற்கேற்றபடி அவளுடன் கூடவேண்டும் ! மனைவி கணவனின் சுகத்திற்குத் தகுந்தபடி, தன்னை தயார் செய்துகொண்டு
  ஆனந்தத்தைத் தர வேண்டும் !

  21. கணவன், மனைவியின் குறைகளை பெரிதாக நினைக்காமல், அவளுடைய உத்தம குணங்களை அனுபவிக்கவேண்டும் !
  மனைவி, கணவனின் குற்றங்களை பெரிதுபடுத்தாமல், அவனுடைய நல்ல பழக்கவழக்கங்களை கொண்டாடவேண்டும் !

  22. கணவன் கோபப்படுகின்ற சமயத்தில் மனைவி, நிதானமாக இருக்க வேண்டும் ! மனைவிக்கு கோபம் வருகின்ற சமயத்தில்
  கணவன் அவளை சாந்தப்படுத்தவேண்டும் !

  23. கணவனின் தோல்விகளில் மனைவி தைரியம் தந்து,நம்பிக்கை தந்து, அவன் வெற்றியடைய உறுதுணையாக இருக்கவேண்டும் !
  மனைவியின் அவமானங்களில் கணவன், அவளுக்கு சமாதானம் சொல்லி,அவளுடைய துக்கத்தை அழிக்கவேண்டும் !

  24. கணவனின் சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி,அதே சமயத்தில் சொத்து சேர்க்கவும் மனைவி சிரத்தையுடன் இருக்கவேண்டும் ! மனைவியின் நியாயமான தேவைகளை
  பூர்த்தி செய்து,ஆடம்பர செலவினங்களைக் கணவன் கட்டுப்படுத்தவேண்டும் !

  25. கணவனின் அழகிலோ,குணத்திலோ, அறிவிலோ, மனைவி ஒரு நாளும் அகம்பாவம் கொள்ளவே கூடாது ! மனைவியின் அழகிலோ,புத்திசாதுர்யத்திலோ, நல்ல குணங்களிலோ, கணவன் எந்த ஒரு சமயத்திலும் கர்வப்படக்கூடாது !

  இது போல் கோடி விஷயங்கள் சொல்ல ஆசை ! இன்னொரு சந்தர்ப்பத்தில் மீதியைச் சொல்லுவேன் ! இப்போதைக்கு முதலில்
  இதில் சொன்னதை கடைபிடித்துப் பார் ! உன் தாம்பத்தியமும் சிறக்கும் ! முயற்சி செய்து பார் !

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சினிமா
தமிழகச் செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort