இந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்,
 • இந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்,

  மகரராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  இந்த வார ராசிபலன் அக்டோபர் 22 முதல் 28 வரை 12 ராசிகளுக்கும்.


   

  மேஷம்

  மேஷராசி அன்பர்களே!

  பணவசதி திருப்திகரமாக இருக்கும்.ஆனாலும், சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படும். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும்.  சகோதரர்கள் வகையில் அனுகூலம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

  அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும்.

  வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதுடன் கடன் கொடுப்பது மற்றும் வாங்குவதையும் தவிர்க்கவும்.

  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைத்தாலும், பணவரவு  சுமாராகத்தான் இருக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

  மாணவர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால், பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்தவும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  அசுவினி: 22, 23, 25, 26, 27; பரணி: 22, 23, 26, 27, 28; கார்த்திகை: 22, 23, 24, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  4, 5, 6

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  அசுவினி: 24, 28; பரணி: 24, 25; கார்த்திகை: 25, 26

  வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
  அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
  அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்
  அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன்  நம்மை அளித்து காப்பான்
   

  ரிஷபம்

  ரிஷபராசி அன்பர்களே!

  பண வரவு ஓரளவுக்கே இருக்கும். ஆனாலும் தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்க ளும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்கு புண்ணிய வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

  அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

  வியாபாரத்தில் விற்பனை கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். லாபமும் கூடுதலாக இருக்கும். புதிய முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து முடிவு செய்யவும்.

  கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கில்லை. ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

  மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்திப் படிப்பீர்கள். அதனால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  கார்த்திகை: 22, 23, 24, 27, 28; ரோகிணி: 23, 24, 25, 28; மிருகசீரிடம்: 22, 24, 25, 26

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 2, 9

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  கார்த்திகை: 25, 26; ரோகிணி: 22, 26, 27; மிருகசீரிடம்:  23, 27, 28

  வழிபடவேண்டிய தெய்வம்:  பெருமாள்

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
  அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
  இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
  அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!


  மிதுனம்

  மிதுனராசி அன்பர்களே!

  வருமானம் திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதற் கில்லை. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

  அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

  வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

  கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

  மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  மிருகசீரிடம்: 22, 24, 25, 26; திருவாதிரை: 22, 23, 25, 26, 27; புனர்பூசம்: 22, 23, 24, 26, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 4, 5

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  மிருகசீரிடம்: 23, 27, 28; திருவாதிரை: 24, 28; புனர்பூசம்: 25

  வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
  சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
  வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

   
  கடகம்

  கடகராசி அன்பர்களே!

  பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.

  வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படும். வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.

  வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்க்கவும்.

  கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  புனர்பூசம்: 22, 23, 24, 26, 27, 28; பூசம்: 23, 24, 25, 27,  28; ஆயில்யம்: 24, 25, 26, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7, 9

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  புனர்பூசம்: 25; பூசம்: 22, 26; ஆயில்யம்: 22, 23, 27

  வழிபடவேண்டிய தெய்வம்:  சிவபெருமான்

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.

  சொற்றுணை வேதியன் சோதி வானவன்
  பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
  கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
  நற்றுணை யாவது நமச்சி வாயவே.

   
  சிம்மம்

  சிம்மராசி அன்பர்களே!

  எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

  அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த  சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.  சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும்.

  வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும்  தேவை

  கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

  மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  மகம்: 22, 23, 25, 26, 27; பூரம்: 22, 23, 26, 27, 28; உத்திரம்: 22, 23, 24, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 4, 6

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  மகம்: 24, 28; பூரம்: 24, 25; உத்திரம்: 25, 26

  வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

  பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
  அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
  படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
   

  கன்னி

  கன்னிராசி அன்பர்களே!  
  பொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு.

  வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

  வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ இப்போதைக்கு முயற்சி செய்யவேண்டாம்.

  கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  
  உத்திரம்: 22, 23, 24, 27, 28; அஸ்தம்: 23, 24, 25, 28; சித்திரை: 22, 24, 25, 26

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7, 9

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  உத்திரம்: 25, 26; அஸ்தம்: 22, 26, 27; சித்திரை:  23, 27, 28

  வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

  பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
  பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
  என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
  அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

   
  துலாம்

  துலாராசி அன்பர்களே!

  பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை  அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

  வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன் கொடுப்பது வாங்குவது இரண்டையும் தவிர்க்கவும்.

  கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தேவையான பணம் கிடைக்கும்.

  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஓரளவு நிம்மதி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  
  சித்திரை: 22, 24, 25, 26; சுவாதி: 22, 23, 25, 26, 27; விசாகம்: 22, 23, 24, 26, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 2, 9

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  சித்திரை: 23, 27, 28; சுவாதி: 24, 28; விசாகம்: 25

  வழிபடவேண்டிய தெய்வம்:  மகாவிஷ்ணு

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,
  கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி
  ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
  நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

   
  விருச்சிகம்

  விருச்சிகராசி அன்பர்களே!

  பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.  உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வது ஆறுதலாக இருக்கும்.

  வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம்.

  கலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.

  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  விசாகம்: 22, 23, 24, 26, 27, 28; அனுஷம்: 23, 24, 25, 27,  28; கேட்டை: 24, 25, 26, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5, 7

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  விசாகம்: 25; அனுஷம்: 22, 26; கேட்டை: 22, 23, 27

  வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

  பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
  என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
  ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
  அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!


  தனுசு

  தனுசுராசி அன்பர்களே!


  பணவரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகளும் இருக்காது. திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,

  அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

  வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

  கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

  மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

  அதிர்ஷ்டம் தரும்  நாள்கள்:
  மூலம்: 22, 23, 25, 27; பூராடம்: 22, 23, 26, 27, 28; உத்திராடம்: 22, 23, 24, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,4

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  மூலம்: 24, 26, 28; பூராடம்: 24, 25; உத்திராடம்: 25, 26

  வழிபடவேண்டிய தெய்வம்:   சிவபெருமான்

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்    
  குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்    
  மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்    
  கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

   
  மகரம்

  மகரராசி அன்பர்களே!

  பண வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கும், சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

  வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விட வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும்.

  மாணவர்களுக்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  உத்திராடம்: 22, 23, 24, 27, 28; திருவோணம்: 23, 24, 25, 28; அவிட்டம்: 22, 24, 25, 26

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5, 6

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  உத்திராடம்: 25, 26; திருவோணம்: 22, 26, 27; அவிட்டம்:  23, 27, 28

  வழிபடவேண்டிய தெய்வம்:  தட்சிணாமூர்த்தி

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
  வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
  ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
  கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.

   
  கும்பம்

  கும்பராசி அன்பர்களே!  

  பண வசதி நல்லபடியே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.

  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். ஆனாலும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

  வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவது பற்றி நன்றாக ஆலோசித்து முடிவு செய்யவும்.

  கலைத்துறையினர்  தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும்.  சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

  மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
  அவிட்டம்: 22, 24, 25, 26; சதயம்: 22, 23, 25, 26, 27; பூரட்டாதி: 22, 23, 24, 26, 27, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  4, 7, 9

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  அவிட்டம்: 23, 27,  28; சதயம்: 24, 28; பூரட்டாதி: 25

  வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

  பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
  மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
  வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
  உள்ளத்தி னுள்ளே உளன்.

   
  மீனம்

  மீனராசி அன்பர்களே!

  பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். வீண் செலவுகள் எதுவும் இருக்காது என்பது ஆறுதலான விஷயம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.

  அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.

  வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

  மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

  குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

  அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  
  பூரட்டாதி: 22, 23, 24, 26, 27, 28; உத்திரட்டாதி: 23, 24, 25, 27,  28; ரேவதி: 24, 25, 26, 28

  அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  5, 6

  தவிர்க்கவேண்டிய நாள்கள்:
  பூரட்டாதி: 25; உத்திரட்டாதி: 22, 26; ரேவதி: 22, 23, 27

  வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

  பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

  விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா
  மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த
  பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி
  வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு செய்தி
விவசாயத் தகவல்கள்
ஆன்மிகம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort