ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தமிழர்களை குடியமர்த்த 28 ஆயிரம் வீடுகள்,
 • ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் தமிழர்களை குடியமர்த்த 28 ஆயிரம் வீடுகள்,

  ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இலங்கை தமிழர்களை குடியமர்த்த 28 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று இலங்கை அறநிலையத்துறை மந்திரி சுவாமிநாதன் கூறினார்.

  ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இலங்கை தமிழர்களை குடியமர்த்த 28 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று இலங்கை அறநிலையத்துறை மந்திரி சுவாமிநாதன் கூறினார்.

  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உலக அன்னதான நாள் மைய அக்‌ஷய ஸ்ரீசாயி தியான சபையில் சாய்பாபாவின் நூற்றாண்டையொட்டி அவர் குறித்த 100 தபால் தலை வெளியிடும் விழா நடந்தது.

  இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சுவாமிநாதன் கலந்து கொண்டு தபால் தலைகளை வெளியிட்டார்.

  பின்னர் மந்திரி சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  இலங்கையில் இறுதிப்போரின் போது ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் விடுவிக்கப்படும். அங்கு மீண்டும் தமிழர்களை குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 31-ந் தேதிக்கு பிறகு 28 ஆயிரம் வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு அரசால் கட்டித் தரப்பட உள்ளது.

  தமிழக மீனவர்கள் பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளது. அதுகுறித்து இருநாடும் முடிவெடுக்க வேண்டும்.

  கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதை தடுக்க முடியாது. ஏனென்றால் கடவுள் தான் ஆணையும், பெண்ணையும் படைத்தார். கடவுளில் பாதி பெண் உள்ளார்.

  இந்த நிலையில் கோவிலுக்கு பெண்கள் செல்வதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சில கட்டுப்பாடுகள் உள்ளது. அந்த கட்டுப்பாடுகளை அனுசரித்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முன்னதாக அவர் கோவிலில் சாய்பாபாவிற்கு தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
மரண அறிவித்தல்
சாதனையாளர்கள்
உலக செய்தி
 மரண அறித்தல்