சுவிட்சர்லாந்தில் மாயமான நபர் சடலமாக மீட்பு: இளைஞர் கைது,
  • சுவிட்சர்லாந்தில் மாயமான நபர் சடலமாக மீட்பு: இளைஞர் கைது,

    சுவிட்சர்லாந்தின் ஸ்விஸ் மாகாணத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலம் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.வடகிழக்கு சுவிட்சர்லாந்தின் ஸ்விஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Brunnen நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

    வியாழன்று மாலை பொலிசாருக்கு கிடைத்த தகவலின்படி சம்பவயிடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குடியிருப்புக்கு வெளியே சடலம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரையும் ஸ்விஸ் மாகாண பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சடலத்தை கைப்பற்றிய பகுதியை சுற்றிவளைத்த பொலிசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனிடையே மரண காரணம் தொடர்பில் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்,கொடூரமாக சித்திரவதைக்கு பின்னரே அந்த நபர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
அரசியல் கட்டுரைகள்
சினிமா
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்