கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் போலிஸ் தடியடி,
 • கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் போலிஸ் தடியடி,

  நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்று வரும் அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

  இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மாநில அரசு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அந்த கோரிக்கையை மாநில அரசு நிராகரித்து விட்டது. மாநில அரசின் முடிவை எதிர்த்து, சபரிமலை செல்லும் வழியில் அமைந்துள்ள நிலக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

  செய்தியாளர்கள் மீது தாக்குதல்: இந்நிலையில், சபரிமலை நடைத் திறப்பு நாளான புதன்கிழமை காலை முதலே பம்பை, நிலக்கல், எருமேலி என பாதை நெடுகிலும் பதற்றமாகக் காணப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  சபரிமலை கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்கு முன்னால் நிலக்கல்லில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், அந்த வழியாக வந்த பெண்களையும், பெண் செய்தியாளர்களையும் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களின் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பெண் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களின் புகைப்படக் கருவிகளும் சேதமடைந்தன.

  போலீஸ் தடியடி: போலீஸாரின் தொடர்ச்சியான வேண்டுகோளையும் மீறி, போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில், அவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி, போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியதில், போராட்டக்காரர்கள் சாலையில் விழுந்து புரண்டு நாலாபுறமும் ஓடினர். இதில், ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  நடை திறப்பு: பதற்றமான சூழலுக்கு மத்தியில் சபரிமலை கோயிலின் நடை சரியாக மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிப்பதற்காக, கோயிலுக்கு வெளியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.

  முழு அடைப்பு: இதனிடையே, பிரவீண் தொகாடியா தலைமையிலான அந்தராஷ்ட்ரிய பரிஷத் மற்றும் சபரிமலை சம்ரக்ஷணா சமிதி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

  144 தடை உத்தரவு: இதையடுத்து, பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, 4 பேர் மற்றும் அதற்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் ஏற்கெனவே 100 பெண் காவலர்கள் உள்பட 700 ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்படவுள்ளனர் என்று காவல் துறை டிஜிபி லோக்நாத் பெஹேரா கூறினார். பக்தர்களின் வாகனங்களை தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

  ஆய்வுக் கூட்டம்: இதனிடையே, சபரிமலை மகர விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து சபரிமலை கோயில் வளாகத்தில் மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசுகையில், ஐயப்ப பக்தர்களுடன் எந்தவிதமான மோதல் போக்கையும் அரசு விரும்பவில்லை; ஆனால், அமைதியாக இருக்கும் மாநிலத்தில், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அரசியல் ஆதாயத்துக்காக பதற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றன. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாக அரசு அணுகும் என்றார்.

  மகளிர் ஆணையம் வேண்டுகோள்: இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மாநில போலீஸார் நடடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

  பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்
  எதிர்ப்பையும் மீறி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி (40) என்ற பெண் பக்தர் துணிச்சலுடன் சபரிமலை செல்வதற்கு வந்தார். பம்பை அருகே வந்தபோது, அவரை ஆண் பக்தர்கள் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவரை போலீஸார் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.

  இதேபோல், ஆலப்புழையைச் சேர்ந்த லிபி என்ற பெண் பக்தர், பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரையும் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்கள் இருவரும் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

  முன்னதாக, பம்பை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தந்திரி குடும்பத்தினர், பந்தள ராஜ குடும்பத்தினர் உள்ளிட்டோரை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து, அவர்கள் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். அதில், பாஜக மாநிலச் செயலர்கள் கே.சுரேந்திரன், எம்.டி.ரமேஷ், ஷோபா சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில காங்கிரஸ் செயல் தலைவர் கே.சுதாகரன் தனது ஆதரவாளர்களுடன், நிலக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
இலங்கை சட்டம்
சரித்திரம்
வீடியோ
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort