நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்,
 • நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம்,

  ஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி நக்கீரன் கோபாலுக்காக வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார்.

  நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் சமூகமளித்தார்.

  வழக்கு நடக்கும் போது வழக்கறிஞராக இல்லாவிட்டாலும் நீதிமன்ற நடுவர் முன் ஊடகப் பிரதிநிதியாக ஆஜராகி முக்கியமான அம்சங்களை எடுத்து வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதித்துறை நடுவர் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து விடுவித்தார்.

  இதற்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறிய ராம், 124-க்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. 124 சட்டம் கேள்விப்பட்டதே இல்லை. 124.ஏ பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது தேசத்துரோக வழக்கு ஆகையால் இந்த வழக்கு புதியதாக உள்ளது. இதற்கும் வழக்குக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறினார்.

  மேலும், வாதத்தில் மூன்று விடயங்களை முன் வைத்தேன், முதலாவதாக 124-வது பிரிவை அனுமதித்தால் இது அபாயகரமான விஷயம், இதை அனுமதித்தால் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மோசமான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று சொன்னேன்.

  இரண்டாவதாக, நீதிபதி என்னிடம், இதுபோன்ற போட்டோக்களை பிரசுரிக்கலாமா? என்று கேட்டார். நான் சொன்னேன் நான் போட்டிருக்க மாட்டேன். ஆனால் பலபேர், பல விதமான ஊடகவியலில் இது இருக்கிறது.

  ஆனால், அதற்கெல்லாம் பாதுகாப்பு என்னவென்றால் 19(1)a சட்டப்பிரிவு ஆகும். நியாயமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், இது எந்தக் கட்டுப்பாட்டிலும் வராது. இதைவிட நிறைய பல ஆங்கிலப் பத்திரிகைகளில் படங்களைப் பிரசுரித்துள்ளார்கள், என்னால் காட்ட முடியும் என்று சொன்னேன்.

  மூன்றாவதாக ஆளுநரின் பதவியை இந்த சர்ச்சையில் புகுத்துவது சரியாக இருக்காது. இது மோசமாக இருக்கும் என்ற விடையத்தை சொன்னேன். நான் வழக்கறிஞர் அல்ல. ஒரு ஊடகவியலாளராக வாதம் செய்தேன். நான் நீதிமன்ற நடுவரை வாழ்த்துகிறேன் என் வாதத்தை அனுமதித்ததற்கு.

  ஒருவேளை நிபுணர் என்கிற முறையில் என் வாதத்தைக் கேட்டிருப்பார். அங்கு பல நிபுணர்கள் இருந்தார்கள். நான் உடன் இணைப்பு மட்டுமே. வழக்கறிஞர் பி.டி.பெருமாள், அவரது குழுவினர் வலுவாக வாதாடினார்கள்.

  இது முதன் முறை எனக்குத் தெரிந்து 124-வது பிரிவை ஒரு இதழுக்கு எதிராக அமுல்படுத்தியுள்ளனர். அதனால் தான் இது மோசமான முன்னுதாரணமாக மாறிப் போயிருக்கும். ஆகவேதான் அதை எதிர்த்து வாதம் செய்தேன். இவ்வாறு ‘இந்து’ என்.ராம் தெரிவித்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
இலங்கை சட்டம்
உலக சட்டம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort