தினகரன் ஆதரவு எம்எல்ஏ கைதாக வாய்ப்பு,
 • தினகரன் ஆதரவு எம்எல்ஏ கைதாக வாய்ப்பு,

  கடந்த மாதம் தமிழக முதல்வரையும், காவல் துறையையும் அவதூறாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும், தினகரன் ஆதரவாளருமான, வெற்றிவேல் மீது ஒரு அவதூறு புகார் எழுந்துள்ளது.

  அதிமுக பிரமுகரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவராக இருக்கிறார். சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில், ஒரு புகார் மனுவினை அளித்துள்ளார்.

  அந்த புகார் மனுவில், ”தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வான வெற்றிவேல். தமிழக முதல்வர் மற்றும் துணை முதலமைச்சரை தகாதவார்த்தைகளால் பேசியுள்ளார் என்றும். மேலும், இருவரையும், ஒருமையில் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் என்றும், இதனால் அதிமுகவின் லட்சக்கணக்கான தொண்டர்களும், தானும் வேதனை அடையந்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

  எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனுவினை பெற்று கொண்ட போலீசார் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-வான வெற்றிவேல், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்தான் அவதூறு கருத்துக்களை கூறியுள்ளார். எனவே இந்த விடயத்தில் ஆலோசனை செய்து வெற்றிவேல் மீது விரைவில் வழக்கு பதிவு செய்யஉள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
ஆய்வுக் கட்டுரை
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்