நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்கு,
 • நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்கு,

  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 சொல்வது என்ன?மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழ் ஆசிரியருமான கோபால், புனே செல்வதற்காக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமானநிலையம் வந்தபோது அவரை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் கைது செய்தார். 

  பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது ஆளுநரின் தனிச்செயலாளர் அளித்த புகாரின் பேரில், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124வது பிரிவின் தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 சொல்வது என்ன? 

  குற்றத்தின் தன்மை ஆழமாகவும், குற்றவியல் தன்மையோடு இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துவிட கூடும் என்பதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124.

  இந்த சட்டப்பிரிவின் படி, இந்திய குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ பணி செய்யவிடாமல் தடுத்தல், தவறாக சித்தரித்தல் அல்லது ஆதராப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகள் வெளியிட்டு அதன்மூலம் அவர்களின் பணிக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் சட்டப்பிரிவு 124வது பிரிவு.  

  தண்டனை: இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படும் ஒருவருக்கு அதிகபட்சம் ஜாமீனில் வெளிவர முடியாத 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய, அபராதம் அளிக்க இந்த சட்டப்பிரிவு அனுமதி வழங்குகிறது. 

  124வது சட்டப்பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவரை எந்தவித பிடியாணையுமின்றி கைது செய்யவும் அவர்களை விசாரணை நடத்தவும் போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்ற உத்தரவு பெறவேண்டிய தேவையோ, கட்டாயமோ இல்லை. 

  அப்படிப்பட்ட குற்றமாக இல்லாதபட்சத்தில் பிடியாணை இன்றி குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யவோ, நீதிமன்ற உத்தரவில்லாமல் விசாரணை நடத்தவோ அதிகாரம் இல்லை. 

  ரத்து செய்ய முடியுமா?: குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து மட்டுமே இந்த பிரிவில் தொடரப்படும் வழக்குகளை உரிய விசாரணை மேற்கொண்டு ரத்த செய்யக்கோரலாம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
சட்டம்
தொழில்நுட்பம்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்