சுவிஸ்சில் அகதி அந்தஸ்து மறுக்கப்படும் ஈழத் தமிழர்கள் படும் பாடும் பணம் பறிக்கும் கும்பலும்,
 • சுவிஸ்சில் அகதி அந்தஸ்து மறுக்கப்படும் ஈழத் தமிழர்கள் படும் பாடும் பணம் பறிக்கும் கும்பலும்,

  கடந்த சில மாதங்களாக  சுவிஸ் நாட்டில் அகதியாக இருக்கும் ஈழத்தமிழர்கள் பலருக்கு அவர்களது அகதி அந்தஸ்துக் கோரிக்கை பின்வரும் காரணங்களை வைத்து நிராகரிக்கப்பட்டுள்ளது அவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் சட்டப்படி நிராகரிக்கப்படுகின்றது இதில் முக்கிய காரணியாக.

  1.சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரும் ஒருவர் தான் எப்படி சுவிஸ் நாட்டிற்க்குள் வந்தார் என்பதை தெளிவு படுத்தவேண்டும்  அவர் வந்த பயண ஒழுங்கின் அடிப்படையில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள எந்த நாட்டிற்க்குள் காலடி வைத்தாரோ அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பொழுது அவர் எந்த ஐரோப்பிய நாட்டில் காலடி வைத்தாரோ அந்த  நாட்டிற்க்கே ஒரு மாதத்திற்க்குள் செல்லுமாறு பணிக்கப்படுவார்.

  அவர் அப்படி செல்லாமல் தனக்கு ஒரு சட்டத்தரணியை நியமித்து மென் முறையீடு செய்து அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் பலவந்தமாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டிற்க்கு தன வந்ததாக வாக்கு மூலம் கொடுத்தாரோ  அந்த நாட்டிற்க்கே சுவிஸ் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்படுவார்,

  அப்படி அவர் அனுப்பி வைக்கப்படும் பொழுது அவர் நாடுகடத்தப்படும் ஆவணத்தில் ஒருவருடம் சுவிஸ் நாட்டிற்க்கும் நுழையக் கூடாது என்றும் அல்லது 3 வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்குள் நுழையக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  இதையும் மீறி சுவிஸ் நாட்டிற்க்குள் நுழைந்தால் ஒருவருடம் சிறைத் தண்டனையும் குறிப்பிட்ட தண்டனைப் பணமும் செலுத்த வேண்டும் என்றும் கட்டாயமாக அதில் குறிப்பிடப்படும்.

  2.இலங்கை நாட்டில் அவருக்கு உயிராபத்து இருப்பதாக விசாரணை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளும் வகையாக அல்லது அவற்றை நிரூபணம் செய்யும் உத்தியோக பூர்வ எழுத்து மூல ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும் அதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அவர்களுக்கு இங்கு அகதி அந்தஸ்து ஏற்றுக் கொள்ளப்படும் அதற்க்கு ஒரு வருடம் முதல் மூன்று  வருடங்கள் காலதாமதமாகும்.

  இவற்று மீதும் சந்தேகம் கொள்ளும் சுவிஸ் விசாரணை  அதிகாரிகள் அகதி அந்தஸ்தை நிராகரித்து ஒருமாதத்திற்க்குள்  நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்படுவார்.

   இப்படியான நிலையில் உள்ள  மூன்று பிள்ளைகளின் தந்தை  ஒருவருக்கு நடந்த சோகம் அவரது மனைவியிநாள் எங்களது இணையத்திற்க்கு தனது துயரத்தைப் பதிந்தார்,

  சுவிஸ் நாட்டில் கணிசமாக தமிழ் மக்கள் வாழும் கூர் மாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் நாட்டிற்க்குள் வந்துள்ளார்  அவரது அகதி அந்தஸ்துக் கோரிகை மூன்று முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.

  இநத மூன்று முறையும் அவரது உறவினர் என்று கூறப்படும் சுவிஸ் நாட்டில் வாழும் பெண்ணால் இவரது அகதி அந்தஸ்துக் கோரிக்கையை நீதிமன்று கொண்டு செல்ல ஒரு மொழி பெயர்ப்பாளரின் அனுசரணையில் சிறந்த ஒரு சட்டத்தரணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அதற்க்கு செலவு அதிகமாகும் என்றும் தொடராக இலங்கையில் இருந்து தொடராக பணம் பெறப்பட்டுள்ளது.

  கடந்த ஏப்ரல் மாதம் சம்பந்தப் பட்டவருக்கு மூன்றாவது முறையும் அவரது அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அவருக்கு உதவி செய்த அவரது உறவினரான பெண்ணின் ஆலோசனையின் பேரில் சட்டவிரோதமாக சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு கட்டணம் செலுத்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

  இவரது  கஷ்ட காலம் பாரிசில் உள்ள சிலரது ஆலோசனையின் பேரில் அங்கு அகதி அந்தஸ்துக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது அங்குள்ள அதிகாரிகளால் இவர் சுவிஸ் நாட்டிற்க்கு அனுப்பப்பட்டு தற்போது இவர் தடுப்புக் காவலில் கடந்த 5 மாதங்களாக உள்ளார்  இவரை மீண்டும் அகதி அந்தசுக் கோரவைத்து அகதி அந்தஸ்து பெற்றுக் கொடுக்க முடியும் என்று தடுப்புக் காவலில் உள்ளவரின் மனைவியைத் தொடர்புகொண்ட.பெண் செலவு செய்தால் உங்கள் கணவருக்கு அகதி அந்தஸ்துப் பெற முடியும் என்று நான்கு மாதத்தில் மூன்று முறை பணம் பெற்றுள்ளார்.

  அதுவும் இந்த சட்டத்தரணி கேட்க்கும் போதெல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்று கூறியதன் பேரில்  அந்தப் பெண் தனது கனவது உறவினர் என்பதாலும் தனக்கும் அறிமுகமானவர் என்பதாலும்  கடந்த மாதம்  எட்டு லட்ச ரூபாய் அனுப்பி உள்ளார்  இது போன்று பலமுறை பணம் கொடுத்துள்ளார் இது மோசடியான ஏமாற்றுப் பணப் பறிப்பு என்பது தெரிய வருகின்றது.

  தற்ப்போது தடுப்புக் காவலில்  உள்ளவரின் மனைவியின் மனக்குமுறலில் தனது பிள்ளைகளுக்கும் தனக்கும் தற்கொலை செய்வதை விட வேறு வழி இல்லை என்று புலம் பினார்  இங்கு அகதி அந்தஸ்துக் கோரி உள்ள தமிழர்கள் உங்களது அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தயவு செய்து இது போன்றவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு இடம் கொடுத்து நீங்களும் கஷ்டப்பட்டு உங்களின் குடும்பத்தவரையும் போலி வாக்குறுதி கொடுப்பவர்களிடம் நம்பி ஏமாற வேண்டாம் என்பதே எங்கள் அறிவுரை,

  ஏற்க்கனவே பல ஈழத்தமிழ் அகதிகள் சுவிஸ் நாட்டில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தலும். முன்னுக்குப் பின் முரணான சட்ட விரோத செயல்களும் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதும் என மிகவும் கடுமையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்பது ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சினிமா
சிறுவர் உலகம்
சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort