சுவிட்சர்லாந்தில் கோயில் நிர்வாக கூட்டத்தில் முறுகல் நிலை,
 • சுவிட்சர்லாந்தில் கோயில் நிர்வாக கூட்டத்தில் முறுகல் நிலை,

  சுவிட்சர்லாந்து, செங்காளன் மாநிலத்தில் அமைந்துள்ள செம்மார்க்கம் முருகன் ஆலயத்தில் அண்மையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

  புலம்பெயர் இந்துக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற குறித்த ஆலயத்தில், நிர்வாகத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத்தாண்டி புலம்பெயர் மக்களின் ஒன்றுமையை சீர்குலைக்கும் ஒன்றாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகின்றன.

  தமிழ் கலாச்சாரங்களை தாண்டி, தமிழர்களின் அச்சாணியாக விளங்கக்கூடிய இந்து ஆலயங்களில் இவ்வாறான வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டமை மனவேதனைக்குரியது.

  புலம்பெயர் மக்களிடத்தில் இவ்வாறான வாய்த்தர்க்கங்கள் ஏற்பட்டு சிதறுண்டுவாழ்வது தமிழ் மக்களுக்கும் தமிழ் மன்றங்களுக்குமே பெரும் பாதிப்பாகஅமைகின்றது. எந்தவொரு ஆலயங்களிலும் நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளுக்கு பொதுமக்கள்கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்பது ஒரு பொது விதி.

  நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்ரோஷமாககதைப்பதால் சாதிக்க முடியாது.

  ஆலயத்தில், அதி உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர் குருக்கள் எனினும்,அந்த குருக்களை நியமிக்கும் பொறுப்பு நிர்வாகத்தினருக்கே உண்டு.

  நிர்வாகத்தினருடன் நாகரீகமான முறையில் பேணுவது தமிழர்களுக்கு நல்லது.கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்கள் சிதறிப்போயுள்ளனர்.

  இவ்வாறான போக்கினால் சிதறுண்டு எதுவுமற்று வெறுமையடைவது ஈழத்தமிழர்களேஎன்பதை உணர வேண்டும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
மங்கையர் மருத்துவம்
தொழில் நுட்பம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்