எச்.ராஜா மென்டல் போல் பேசுகிறார் விளாசிய டிடிவி தினகரன்,
 • எச்.ராஜா மென்டல் போல் பேசுகிறார் விளாசிய டிடிவி தினகரன்,

  சென்னை: எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

  எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே 4 வாரத்தில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் எச் ராஜாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

  மனநலம் பாதிக்கப்பட்டவர்

  இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எச் ராஜா குறித்து அவர் பேசியதாவது, எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார்.

  தமிழ்நாட்டில் இடமில்லை

  இந்துமதம், தானே தன்னை பாதுகாத்து கொள்ளும்; யாரும் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. தாம் சார்ந்த இயக்கத்தை வளர்க்கும் நோக்கில் எச்.ராஜா செயல்படுகிறார். மத வெறியை தூண்டுவோருக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.

  கலவர பூமியாக்க

  தமிழகத்தில் பெரியார் பிறந்தநாள் அன்று பெரியார் சிலை அவமதிக்கப்படுவது கண்டனத்திற்குரிய செயல். மேலும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.

  பெரியார் சிலை அவமதிப்பு

  தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சதியை முறியடிக்க வேண்டும். பெரியார் சிலையை அவமதித்தவர் மீது போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
ஜோதிடம்
மருத்துவம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்