ஜாதி, அந்தஸ்து மீறி மகளுடன் திருமணம் நடுரோட்டில் மருமகன் வெட்டி கொலை,
 • ஜாதி, அந்தஸ்து மீறி மகளுடன் திருமணம் நடுரோட்டில் மருமகன் வெட்டி கொலை,

  வாகன ஓட்டிகள் கடும் அவதி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சம்... இந்த வாரத்தில் மட்டும் ரூ.3 வரை அதிகரிப்பு

  திருமலை: தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடாவை சேர்ந்தவர் பிரனாய் நாயக்(30). சாப்ட்வேர் இன்ஜினியர். அதே ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ். இவரது மகள் அமிர்தவர்ஷினி(20). பிரனாய் நாயக்கும், அமிர்தவர்ஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு ஜாதி மற்றும் அந்தஸ்து தடையாக இருந்ததால் இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்பு மீறி இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டனர். ஐதராபாத்தில் தங்கி அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பிரனாய் நாயக் பணியாற்றி வந்தார்.

  இந்நிலையில் கர்ப்பிணியான தனது மனைவி அமிர்தவர்ஷினியை மருத்துவ பரிசோதனைக்காக நேற்று மீரியாலகுடா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மர்ம ஆசாமி, திடீரென பிரனாய் நாயக்கை வழிமறித்து அவரது மனைவி கண்முன்னே அவரது கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமிர்தவர்ஷினி, செய்வதறியாமல் கதறி அழுதார். இந்த பயங்கர சம்பவத்தில் அதேஇடத்தில் ரத்த வெள்ளத்தில் பிரனாய் நாயக் பலியானார்.

  தகவலறிந்து வந்த பிரனாய் நாயக்கின் பெற்றோர், மகனின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து அவர்கள் மிரியாலகுடா போலீசில் புகார் செய்தனர். அதில், ‘இந்த கொலைக்கு காரணம் அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ்தான். ஏனெனில் தனது பேச்சை மீறி ஜாதி, பொருளாதாரத்தில் குறைந்தவரான பிரனாய் நாயக்கை திருமணம் செய்துகொண்டதால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்தார். எனவே ரவுடிகளுக்கு பணம் கொடுத்து ஆள் அனுப்பி அவர் தான் எங்கள் மகனை கொலை செய்துள்ளார்’ என தெரிவித்தனர்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சடலத்ைத மீட்டு நல்கொண்டா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மகள் அமிர்தவர்ஷினியை பிரிந்துசெல்லும்படி அவரது தந்தை மாருதிராவ் மற்றும் சித்தப்பா சரவண் ஆகியோர், மருமகன் பிரனாய் நாயக்கை கடந்த 3 மாதங்களாக மிரட்டி வந்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

  கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 8 தனிப்படைகள் அமைத்து மாருதிராவ், சரவண் மற்றும் கொலையாளியை தேடிவருகின்றனர். கண்ணெதிரே கணவர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் அமிர்தவர்ஷினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்ப்பிணியாக உள்ள தனது மகளின் வாழ்க்கை சீரழிந்தாலும் கவலை இல்லை என எண்ணி ஜாதி, அந்தஸ்துக்காக மருமகனை கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
இலங்கை செய்தி
உலக செய்தி
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort