புனர்­வாழ்வு அளித்து தம்மை விடு­விக்க வேண்டும் சுமந்திரனிடம் கைதி­களின் கோரிக்கை,
 • புனர்­வாழ்வு அளித்து தம்மை விடு­விக்க வேண்டும் சுமந்திரனிடம் கைதி­களின் கோரிக்கை,

  உண்­ணா­வி­ரதம் இருக்கும் கைதி­களை சந்­தித்த சுமந்­திரன் எம்.பி. நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எம்மை புனர்­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்டும் என அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் தெரி­விப்­ப­தாக அர­சியல் கைதி­களை சந்­திக்கச் சென்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­ன­ரான எம்.ஏ.சுமந்­தி­ர­ன் குறிப்­பிட்டார்.

  அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களை நேற்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் மற்றும் வட­மா­காண சபை உறுப்­பினர் கே. சயந்தன் ஆகியோர் சந்­தித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் நிலைப்­பாடு குறித்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்

  இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

  அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருந்து வரும் தமிழ் அர­சியல் கைதிகள் 8 பேரை நேற்று சந்­தித்து அவர்­களின் நிலைமை குறித்து அறிந்­து­கொண்டேன்.

  கடந்த 9 ஆண்­டு­க­ளாக சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தம்மை புனர்­வாழ்வு வழங்கி விடு­தலை செய்­யக்­கோரி தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.

  இதற்கு முன்­னரும் தமது நிலைப்­பாட்டை கடிதம் மூல­மாக அவர்கள் அறி­வித்­தி­ருந்­தனர். தம்மை விடு­தலை செய்யக் கோரி ஏற்­க­னவே அவர்கள் முன்­வைத்த கார­ணி­களை கவ­னத்தில் கொள்­ளாத நிலையில் மீண்டும் அவர்கள் கடிதம் மூல­மாக தம்மை புனர்­வாழ்­வுக்குட்­ப­டுத்தி விடு­விக்கக் கோரு­கின்­றனர்.

  9 ஆண்­டு­க­ளாக சிறையில் இருக்­கின்ற போதிலும் அவர்­களின் வழக்­குகள் எவையும் இன்­னமும் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­ப­ட­வில்லை எனவும் கூறு­கின்­றனர்.

  தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க வேண்டும் என இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்திலிருந்தே நாம் தெரி­வித்து வரு­கின்றோம். ஒரு­ சி­லரை அர­சாங்கம் விடு­தலை செய்­துள்ள போதிலும் அனை­வ­ரையும் விடு­விக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

  இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த போது அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தாக வாக்­கு­றுதியளித்­தது. குறிப்­பாக ஜனா­தி­பதி எமக்கு அந்த வாக்­கு­று­தியை வழங்­கி­யி­ருந்தார்.

  எனினும் இப்­போது வரையில் அவர் தனது வாக்­கு­று­தியை நிறை­வேற்­றாது வேறு சில கார­ணி­க­ளுக்­கா­கவும் தெற்கின் மக்­களை சமா­ளிக்க முடி­யா­மலும் இழுத்­த­டிப்­பு­களை செய்து வரு­கின்றார்.

  எனினும் தமிழ் மக்கள் விட­யத்தில் அவர் அக்­கறை செலுத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் நாமும் தொடர்ச்சியாக அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே எமது ஒரே நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
உலக சட்டம்
தையல்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்