எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு video,
  • எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு video,

    உயர்நீதிமன்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசியது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 8 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

    இதற்கிடையே, திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர். அவர்களின் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எச். ராஜா உள்பட 8 பேரை கைது செய்வதற்காக ஆய்வாளர் மனோகரன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
மரண அறிவித்தல்
சரித்திரம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்