எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு video,
  • எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு video,

    உயர்நீதிமன்றம் குறித்து இழிவான கருத்துகள் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட 8 பேர் மீது திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, சென்னை  உயர் நீதிமன்றம் குறித்து அவர் கீழ்தரமாக பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

    இந்நிலையில், திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
எம்மவர் நிகழ்வுகள்
ஆன்மிகம்
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்