காயமடைந்த நிலையில் மனைவியுடன் தப்பி ஓடிய நடிகர் விஜய் video,
 • காயமடைந்த நிலையில் மனைவியுடன் தப்பி ஓடிய நடிகர் விஜய் video,

  கலவரமாக மாறிய கல்யாண வீடு, காயமடைந்த நிலையில் மனைவியுடன் தப்பி ஓடிய நடிகர் விஜய்,

  புதுச்சேரியில் தனது ரசிகரின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகர் விஜய்யை பார்க்கவும்,இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

  நேற்று மாலை விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த் அவர்களின் மகளது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  இந்த திருமண விழாவில் நடிகர் விஜய்யும்,அவரது மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டனர் .இதை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

  மேலும் அங்கு ரசிகர்கள் விஜயுடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் ,கையெழுத்து வாங்கவும் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு உருவானது.

  இந்நிலையில் அடிதடி ,கூட்டம் தள்ளுமுள்ளு என பதற்றமான சூழ்நிலையில் நடிகர் விஜயும் சங்கீதாவும் மேடையில் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.மேலும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனர். மேலும் ஏற்பட்ட கலவரத்தால் விஜய்க்கு சிறிதளவு காயமும் ஏற்பட்டது.

  பின்னர் விஜய் , தனது மனைவி சங்கீதாவுடன் அந்த திருமண மண்டபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தோம் என ஓடினார் .இதுகுறித்த வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது .

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
சிறுவர் உலகம்
மருத்துவம்
வீடியோ
 மரண அறித்தல்