சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியீடு,
 • சீமராஜா படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியீடு,

  சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசாகிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
  சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசானது. படத்தில் சிவகார்த்திகேயன் அரச குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார்.

  சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறைாயக சமந்தா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன், லால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கின்றனர்.

  பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம். ஸ்டூடியோஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளையும் சீமராஜா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தகவல்படி, முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது.

  முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
உலக சட்டம்
தொழில் நுட்பம்
ஆன்மிகம்
 மரண அறித்தல்