மன அழுத்தத்தை குறைக்க கீற்றாமின் மாத்திரை பாரிய ஆபத்து எச்சரிக்கை,
 • மன அழுத்தத்தை குறைக்க கீற்றாமின் மாத்திரை பாரிய ஆபத்து எச்சரிக்கை,

  மருத்துவத்தில் மன அழுத்தங்களுக்கு சிகிச்சையளிக்கவென கீற்றாமின் (Ketamine) மாத்திரையே அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

  இச் சேர்வை உண்மையில் நோயாளியின் மூளைப் பகுதியிலேயே செயற்படுகின்றது என தற்போது மேற்கொள்ளப்பட்டிருந்த மருத்துவ ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

  12 பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்த இவ் ஆய்வில் இக் கீற்றாமைன் மூளையின் ஓபியாயிட் வாங்கிகளில் தொழிற்படுவதாகத் தெரியவந்திருக்கின்றது.

  இதனால் மூளையின் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  இக் கீற்றாமைன் சேர்வைக்கு FDA இனால் இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிராவிடினும் சில வைத்தியர்கள் மன அழுத்தங்களுக்கெதிராக இதனைச் சிபாரிசு செய்வதுண்டு.

  தற்போது பெறப்பட்ட ஆய்வு முடிவுகளும் இதனை மன அழுத்த எதிரியாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கின்றது.

  எனினும் இதன் பாவனை தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
சுவிஸ் செய்தி
எம்மவர் நிகழ்வுகள்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்