தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் மாற்றம்,
  • தமிழகம் முழுவதும் 22 டிஎஸ்பிக்கள் மாற்றம்,

    சென்னை : டி.கே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் இருந்த மகேந்திரன் காஞ்சிபுரம் மாவட்ட மதுராந்தகம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், தருமபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த சுப்பையா ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த கங்காதரன் திருவள்ளூர் டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த விஸ்வநாத் ஜெயின் சென்னை தரமணி உதவி கமிஷனராகவும், சென்னை தரமணி உதவி கமிஷனராக இருந்த சுப்புராயன் சென்னை பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்டிபியாக இருந்த பன்னீர் செல்வம் சென்னை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை ஓசிஐயூ(நிர்வாகம்) டிஎஸ்பியாக இருந்த கோவிந்தராஜிவ் சென்னை பரங்கிமலை உதவி கமிஷனராகவும், பரங்கிமலை உதவி கமிஷனராக இருந்த மோகன்தாஸ் மதுரை நகர உதவி கமிஷனராகவும், காஞ்சிபுரம் மாவட்ட குற்ற ஆணவ காப்பக டிஎஸ்பியாக இருந்த கண்ணன் சென்னை ராயபுரம் உதவி கமிஷனராகவும், சென்னை ராயபுரம் உதவி கமிஷனராக இருந்த தனவேல் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த சச்சிதானந்தம் வேலூர் மாவட்ட ஆம்பூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த ராமநாதன் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக இருந்த கோமதி கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித வளம் டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருவாரூர் மாவட்ட  குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த நடராஜன் திருவாரூர் டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட  குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சந்திரசேகர் திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டி டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த அய்யனார் புதுக்கோட்டை ஆலங்குடி டிஸ்பியாகவும், சிவகங்கை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த முருகேசன் ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி டிஎஸ்பியாகவும், கோவை சிவில் சப்ளை சிபிசிஐடியாக இருந்த ஆனந்தகுமார் திருச்சி சிவில் சப்ளை சிபிசிஐடியாகவும், கோவை சிவில் சப்ளை சிபிசிஐடியாக இருந்த வெற்றிசெல்வன் கோவை நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிச்சந்திரன் திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை தலைமையிட சிறப்பு பிரிவு சிஐடியாக இருந்த சுந்தரேசன் தமிழ்நாடு கமாண்டோ படை(சென்னை) டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
சரித்திரம்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்