புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்,
 • புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்,

  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பணத்துக்கு விலைபோகும் அதிகாரிகளின் துணையுடன் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருவது, தற்போது  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தமிழக சிறை சாலைகளில் தண்டனை பெற்று வருகிற கைதிகள் மத்தியில் செல்போன் புழக்கம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் போன்ற பயன்பாடு அதிகரித்து வருவதாக சமீபத்தில்  குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

  சென்னை புழல் சிறையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது செல்போன்கள், கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது  போலீசார் கைப்பற்றிய ஒரு செல்போனில் இருந்த புகைப்படங்கள் தற்போது, வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி  இருக்கிறது.

  சிறைக்கைதிகள் தங்கி உள்ள அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில், உல்லாச விடுதிகளை போல், கைதிகள் அறைகள்  அழகுபடுத்தப்பட்டுள்ளது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. அறைக்குள் கட்டில் போடப்பட்டு  சொகுசு மெத்தையுடன், விலை உயர்ந்த தலையணைகளும்  காணப்படுகின்றன.இதை வைத்து பார்க்கும்போது சிறையில் பணத்துக்கு விலைபோகும் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்பது எல்லாம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. கைதிகள் உல்லாச சுற்றுலா  பயணம் மேற்கொள்வதுபோன்று டிப்-டாப்பாக உடைகளை அணிந்து காணப்படுகிறார்கள்.

  விலை உயர்ந்த ஷூக்கள், டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடியும்  கைதிகள் சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர். செல்போனில் செல்பி எடுப்பது, சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுப்பது, இன்னொருவர் சிறை வளாகத்தில் “ஹாயாக” நடந்து செல்வது  மற்றும் ஜிப்பா உடை அணிந்தபடி இரண்டு கைகளை நீட்டி கைதி போஸ் கொடுப்பது உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது.

  இதேபோன்று, அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ்கள் சிறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், விதவிதமான உணவு வகைகளும்  பரிமாறப்பட்டுள்ளன. சிறைக்குள்ளேயே இந்த உணவுகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.

  இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, டி.ஐ.ஜி கனகராஜ் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் குழுவினர் புழல் சிறைக்கு வந்தனர். பின்னர், அனைத்து  கைதிகள்  அறைகளிலும் நுழைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கைதிகளுக்கு சொகுசு வாழ்கையை அமைத்து கொடுத்தது யார்? புகைப்படங்கள் எப்படி வெளியானது? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், புழல் சிறை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

  கைதியிடம் செல்போன் பறிமுதல்
  பூந்தமல்லி கரையான்சாவடியில் தனி கிளை சிறை செயல்பட்டு வருகிறது. சிறை வளாகத்தின் அருகில் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. முன்பு இந்த வளாகத்தில் இலங்கை தமிழர்  சிறப்பு அகதிகள் முகாம் செயல்பட்டது. பின்னர் அது மூடப்பட்டு கிளை சிறையாக மாற்றப்பட்டது. அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது  செய்யப்பட்டவர்கள் உள்பட 18 கைதிகள் இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு கண்காணிப்பில் இருந்து வருகிறது.

  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறைத்துறை அதிகாரி கோதண்டராமன் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கைதிகளின் அறைகள் சோதனையிடப்பட்டது. இதில்  சூளைமேட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் விஜய்தண்டபாணி (42) என்பவர் இந்த கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 10க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடைய இவரது,  அறையில் சோதனையிட்ட போது, ஒரு செல்போன், ஒரு சிம்கார்டு, ஒரு பேட்டரி ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

  இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் சிறை அதிகாரி கோதண்டராமன் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிறைக்குள் எப்படி செல்போன் வந்தது, யார் கொண்டு வந்து கொடுத்தது என்பது  குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல கடந்த டிசம்பர் மற்றும் மார்ச் மாதங்களிலும், கைதிகளிடமிருந்து செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

  கூடுதல் டி.ஜி.பி., விசாரணை :

  சிறைத்துறை இயக்குனரும், கூடுதல், டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு ஆட்டம் போட துணையாக இருந்த காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அறிக்கை தருமாறு, சிறை விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவர்களின் நடவடிக்கையும் ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.

   

  புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள், புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள், புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள், புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள், புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள், புழல் சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் மருத்துவம்
சரித்திரம்
சட்டம்
தங்க நகை
 மரண அறித்தல்