ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்ட சுவிட்ஸர்லாந்து,
 • ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்ட சுவிட்ஸர்லாந்து,

  மேற்கு நாடுகளாக இருந்தாலும் கீழைத்தேய நாடுகளாக இருந்தாலும் ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் மக்களை ஆக்கிரமித்துள்ளது.

  இந்தநிலையில் மேற்கத்திய நாடான சுவிட்ஸர்லாந்து, முதன் முதலில் மாற்று மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அங்கீகரித்துள்ளமை மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

  ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையாளர்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் முறையை மேலும் ஒழுங்குபடுத்த, சுவிட்ஸர்லாந்து அரசு, குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

  2015-ல் ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் மருந்துகளை ஏற்றுக் கொண்ட ஒரே மேற்கத்திய நாடாக சுவிட்ஸர்லாந்து விளங்குகிறது.

  இது தொடர்பில் சுவிஸ் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, இங்கு ஆயுர்வேத மருத்துவத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக இதனை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு குழுவொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் குழு, மருத்துவர்களுக்கு முறைப்படி சட்ட அனுமதி, விற்கக் கூடிய மருந்துகளுக்கான சட்ட அனுமதி ஆகியவற்றை தீர்மானம் செய்யவுள்ளது.

  2009-ம் ஆண்டு அந்நாட்டு மக்கள் தங்கள் நாட்டுச் அரசமைப்புச் சட்டத்தில் மாற்று மருத்துவ முறை, சிகிச்சை, மருந்துகளை அங்கீகரிக்கும் பிரிவை உருவாக்க ஆதரவளித்து வாக்களித்தனர்.

  இதனையடுத்து தங்களது சுகாதார, மருத்துவ ஒழுங்கமைப்புக்குள் ஆயுர்வேதத்தையும், மாற்று சிகிச்சை முறைகளையும் அனுமதித்த முதல் மேற்கத்திய நாடாகத் சுவிட்ஸர்லாந்து.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
வினோத நிகழ்வுகள்
சரித்திரம்
 மரண அறித்தல்