சிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்,
 • சிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்,

  உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

  சிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்
  உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

  * சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

  * அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

  * கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

  * சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

  * சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

  * சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

  * சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

  * மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

  * ஜுரம் இருக்கலாம்.

  மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

  * திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

  * உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

  * உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
இந்திய சட்டம்
உலக செய்தி
சட்டம்
 மரண அறித்தல்