வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு தமிழக அரசு,
 • வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு தமிழக அரசு,

  ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசு - தமிழக அரசு

  இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

  இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
இலங்கை சட்டம்
அரசியல் கட்டுரைகள்
வீடியோ
 மரண அறித்தல்