நயன்தாராவுடன் மோதாமல் திரிஷாவுடன் மோதும் ஸ்ரேயா,
  • நயன்தாராவுடன் மோதாமல் திரிஷாவுடன் மோதும் ஸ்ரேயா,

    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, தற்போது நயன்தாராவுடன் மோதாமல் திரிஷாவுடன் மோத இருக்கிறார்.

    தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரேயா. இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்திருக்கிறார்.

    துருவங்கள் 16 பட புகழ் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால், அன்றைய தினத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’, தினேஷின் ‘அண்ணனுக்கு ஜே’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால், செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

    செப்டம்பர் 13-ல் திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘96’, சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’, சமந்தாவின் ‘யூடர்ன்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
வீடியோ
சுவிஸ் செய்தி
உலக சட்டம்
 மரண அறித்தல்