2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக படுதோல்வியடையும்: கேஜ்ரிவால் சாடல்
 • 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக படுதோல்வியடையும்: கேஜ்ரிவால் சாடல்

  மக்கள் கோபத்தோடு இருப்பதால் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும்,  டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் (இன்று) திங்கள்கிழமை தெரிவித்தார்.

  கேஜ்ரிவாலின் ட்விட்டர் பதிவு வருமாறு:

  பாஜக எம்.பி.க்களின் செயல்பாடுகளினால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. டெல்லி ஆட்சிக்கு தடைகளை ஏற்படுத்திவரும் பாஜக மீது மக்கள் அதிக கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் வரும் 2019 -ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.

  இவ்வாறு கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. டெல்லி அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதற்கு துணை நிலை ஆளுநர் அலுவலகம் முட்டுக்கட்டை போட்டு வந்தது.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகார வரம்புகளை வரையறை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் டெல்லி அமைச்சரவை முடிவுகளுக்கு உட்பட்டே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

சுவிஸ் செய்தி
சிறுவர் உலகம்
மருத்துவம்
 மரண அறித்தல்