பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டி அணைத்த விவகாரம்: விமர்சனத்துக்குள்ளான சித்து
 • பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டி அணைத்த விவகாரம்: விமர்சனத்துக்குள்ளான சித்து

  இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டி அணைத்ததற்காக பஞ்சாப் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

  பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.

   
  இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை. இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சிக்கு 176 பேரின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.

  இதனைத் தொடர்ந்து  சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றார்.

  இந்தப் பதவியேற்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்து கலந்து கொண்டார்.  அப்போது சித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதியான காமர் ஜாவத் பாஜ்வாவைக் கட்டி அணைத்துக் கொண்ட சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடனான உரையாடல் குறித்து சித்து கூறும்போது, "பாஜ்வா நமக்கு அமைதி தேவை” என்று கூறியதாகத் தெரிவித்தார்.

  இந்த நிலையில் சித்துவின் இந்த நடவடிக்கையை பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

  இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுத் தியாகியாகின்றனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டிப்பிடித்தது தவறானது. அதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.  நமது ராணுவ வீரர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை சித்து உணர வேண்டும்" என்றார்.

 • பகிர்ந்தளிக்க :

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொழில்நுட்பம்
உலக சட்டம்
தையல்
 மரண அறித்தல்