இராணுவம் நல்லவர்கள்; எதிராக போராடுபவர்களாலேயே பிரச்சனை,
 • இராணுவம் நல்லவர்கள்; எதிராக போராடுபவர்களாலேயே பிரச்சனை,

  யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினர் மனிதநேயம் மிக்கவர்கள். தற்போதைய இராணுவத் தளபதியும், யாழ்ப்பாண கட்டனை தளபதியும் மிகவும் மனிநேயம் மிக்கவர்கள். மக்களின் தேவைகளை அறிந்து, இராணுவக முகாம்களை அகற்றி மக்களின் இடங்களை விடுவித்து வருகிறார்கள். இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களை செய்பவர்கள்தான் காணி விடுவிப்பை குழப்புபவர்கள்- இவ்வாறு கூறியிருக்கிறார் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாரதிராசாவின் உதவியாளரும், வலிவடக்கு தவிசாளருமான சோ.சுகிர்தன்.

  கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுவனின் இடம்பெற்ற பாலர் ஞானோதய சங்கம் தாயக உறவுகளின் கிராம மேம்பாட்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்- கட்டுவன், வறுத்தலைவிளான், மயிலிட்டி தெற்கு, தென்மயிலை போன்ற இடங்களில் 90 வீதமான நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு விட்டது. இந்த உழைப்பின் பின்னால் பலருடைய உழைப்பு இருக்கிறது.

  இதேபோல குரும்பசிட்டி காணிகளில் விமான நிலையத்திற்கு எடுக்கப்படுவதாக இருந்த காணிகளை, எடுக்கமாட்டார்கள் என சொல்லப்படுகிறது.

  எதிர்காலத்தில் கட்டுவன்- மயிட்டி வீதியே விமான நிலையத்திற்கான பிரதான பாதையாக இருக்கும். அந்த இடம் வளம்மிக்க இடமாக மாறும் என குறிப்பிட்டார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
விளையாட்டு செய்தி
சாதனையாளர்கள்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்