வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம்,
 • வடக்கு, கிழக்கில் முகாம்களைச் சுருக்குவோமே தவிர அகற்றமாட்டோம்,

  வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் மூடப்படாது என்றும், எனினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் சுருக்கப்படும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

  ”வடக்கு, கிழக்கில் மேலும 522 ஏக்கர் காணிகளை விடுவிக்க நாம் தயாராக இருக்கிறோம்.

  இந்தக் காணிகளை விடுவிக்க முன்னர், எமது உட்கட்டமைப்பு வசதிகளை நகர்த்த வேண்டியுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

  இதற்காக 800 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். ஏற்கனவே 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

  எஞ்சிய தொகையை இன்றைக்கு வழங்கினால் கூட, ஒரே இரவில் முகாம்களை அகற்றி விட முடியாது. எமது படையினரை இடம்மாற்றுவதற்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கு 5 மாதங்களாவது தேவைப்படும்.

  எனவே, ஆறு மாதங்களுக்குள் நிதியை வழங்கினால், எமது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, நாங்கள் வேறு இடத்துக்கு நகர முடியும்.

  2018 ஜூலை 31 வரை, சிறிலங்கா இராணுவம், வடக்கு கிழக்கில் 65,133 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது, தற்போது, இராணுவத்திடம் 19,300 ஏக்கர் காணிகள் உள்ளன.

  இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும், 16,115 ஏக்கர் காணிகளையும், கிழக்கில், மூன்று மாவட்டங்களில், 3,185 ஏக்கர் காணிகளையும் இராணுவம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காணிகளில் 2,621  ஏக்கர் மாத்திரமே, தனியார் காணிகள். ஏனைய 16,680 ஏக்கர் காணிகளும் அரச காணிகள்.

  2009ஆம் ஆண்டில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், 84,434 ஏக்கர் காணிகள் இருந்தன. ஏனைய காணிகள் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விடுவிக்கப்பட்டு விட்டன.

  பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
இந்திய சட்டம்
 மரண அறித்தல்