கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு நிலச்சரிவு அபாயத்தால் எச்சரிக்கை,
 • கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு நிலச்சரிவு அபாயத்தால் எச்சரிக்கை,

  திருவனந்தபுரம்: வரலாறு காணாத கனமழையால் கேரளாவில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து பாதுகாப்பு கருதி 22 அணைகளில் இருந்து திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படும் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,401 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 2,399 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான சிறுதோணி அணையின் ஒரு மதகு மட்டும் நேற்று திறக்கப்பட்டு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

  இன்று மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இடுக்கி அணையில் பிற்பகலில் மேலும் 2 மதகுகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் சரிவு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டுள்ளனர். மிக உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் பாய்தோடி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

  மேலும் முகத்துவார இடங்களான ஆலுவா மற்றும் எர்ணாகுளத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதே போன்று மாநிலத்தின் மற்ற அணைகளான முல்லைபெரியாறு அணை, இடமழையாறு அணை உள்ளிட்ட 22 அணைகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் அனைத்து ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகிறது.

  கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்வு : மீட்பு, நிவாரணப் பணிகளில் முப்படைகள் தீவிரம்

  திருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. கோழிக்கோட்டில் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது.

  பல இடங்களில் வீதிகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் முக்கிய சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  மழை தொடர்வதால் இடுக்கி அணை நிரம்புகிறது. இதையடுத்து அதன் ஒருபகுதியான சிறுதோணி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பட்டுள்ளது. வயநாடு கண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்கிறது. கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மீளாத நிலையில் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

  இதையடுத்து முப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
சிறுவர் உலகம்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்