வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ- மீட்பு பணிகள் தீவிரம்,
 • வெள்ளத்தில் மூழ்கிய ரொறன்ரோ- மீட்பு பணிகள் தீவிரம்,

  ரொறன்ரோவில் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.

  50 மில்லிமீட்டரில் இருந்து 100 மில்லி மீட்டர் வரையிலான மழைப் பொழிவை எதிர்பார்ப்பதாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரித்திருந்த நிலையில், நோர்த் யோர்க் மற்றும் டவுன்ரவுன் மத்திய பகுதிகளில் இரவு இரண்டு மூன்று மணி நேரங்களினுள்ளேயே 50 இலிருந்து 75 மில்லிமீட்டர் வரையிலான மழை பொழிந்துள்ளது.

  இதனால் பல இடங்களில் ஏற்பட்ட வெள்ள நீரில் வீதிகள், வாகனங்கள், கட்டிடங்களின் கீழ் மற்றும் நிலக்கீழ்த் தளங்கள் மூழ்கிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த நிலைமை காரணமாக சில பகுதிகளில் வெள்ளத்தினுள் சிக்குண்ட வாகனங்களில் இருந்தோரை மீட்பதற்கான பணிகளை ரொரன்ரோ பொலிஸாரின் சிறப்பு நீச்சல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  அதேபோல நேற்றைய இந்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு வேளையில் மின் விநியோகம் தடைப்பட்டதால் பலர் சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படும் நிலையில், 16,000க்கும் மேற்பட்ட தமது வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ரொரன்ரோ ஹைட்ரோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
மங்கையர் பகுதி
தமிழகச் செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்