83 கிராமங்களை பாலைவனமாக்கும் தண்ணீர் தொழிற்சாலைஉங்களுக்கு தேவையா,
 • 83 கிராமங்களை பாலைவனமாக்கும் தண்ணீர் தொழிற்சாலைஉங்களுக்கு தேவையா,

  பதுளை வீதியில் உள்ள பதினொரு கிராம சேவகர் பிரிவுகளும் உள்ள மக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் போது புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி நிர்வாகத்தை எதிர்ப்போம்.

  1. ஜெமுனுபுர 2. பெரியபுல்லுமலை 3. கோப்பாவெளி 4. உறுகாமம் 5. கித்துள் 6. மரப்பாலம் 7. கரடியனாறு 8. வேப்பவெட்டுவான் 9 . பங்குடாவெளி 10. கொடுவாமடு 11, மயிலவெட்டுவான் . இந்த பதினொரு கிராம சேவகர் பிரிவில் 83 கிராமங்கள் உள்ளடங்குகின்றன. 11 கிராமங்களில் மக்கள் இல்லை. மொத்த சனத்தொகை 15144 . குடும்பங்கள் 4204. இந்த 83 கிராமங்களும் குடிக்க தண்ணீர் இல்லாமல் பஞ்சத்தை எதிர் நோக்குகின்றனர்.

  இன்நிலையில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பதற்கான தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் .

  இதனை தடுக்க கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

  அவர்களது போராட்டத்திற்கு ஒரு சில மக்கள் பிரதிநிதிகளே ஆதரவு வழங்கி வருகின்றனர்.

  ஏனையோர் தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களாகவே உள்ளனர்.

  குறிப்பாக சில தமிழ் கட்சிகள் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை ஆர்ப்பாட்டங்களில் தங்களது உறுப்பினர்களை கலந்து கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  புல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலை மக்களின் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்கும் அரசிசயல்வாதிகளை பதுளை வீதி மக்கள் இனி புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

  மட்டக்களப்பு புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காத்தான்குடி தவிசாளசினால் அமைக்கப்படும் தண்ணீர்தொழிற்சாலைக்கு மட்டக்களப்பு மாவட்ட சில அரசியல் கட்சிகளைச்சேர்ந்தவர்கள் ஆதரவளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

  குறிப்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் புல்லுமலையில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத் தொழிற்லைக்கு சார்பாக உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  இதேவேளை
  09.08.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

  பொது மக்களின் ஆர்ப்பாட்டம் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் எதிர்ப்புகளையும் மீறி

  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது எதிர்ப்புகளையும் மீறி குறித்த தொழிற்சாலை அமைக்கும் பணி தொடர்வதால் இம்முறை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன் 'ஜனாதிபதிக்கு சொல்வோம் ' என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்.

  தற்போது இப் பிரதேசத்தில் கிணறுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில், இங்கு இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அவ்பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்ச படுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்ப்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் காணப்படுகின்றனர்.

  பல்வேறு வழிகளிலும் பொதுமக்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு சுதந்திர கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

  இவ் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரேதச பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இது இவ்வாறு இருக்க இத்தொழில்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி மற்றும் செங்கலடி சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தொழிற்சாலையை நிறுத்துவதற்க்கும் இதன் விளைவுகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன்

   09.08.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புல்லுமலை தண்ணீர் தொழில்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

  83 கிராமங்களை பாலைவனமாக்கும் தண்ணீர் தொழிற்சாலைஉங்களுக்கு தேவையா,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
எம்மவர் நிகழ்வுகள்
ஆன்மிகம்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்