சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி,
 • சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி,

  சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.

  சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று சென்று கொண்டு இருந்த ஒரு விமானமத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர்.

  திடீரென அந்த  விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியானார்கள்.

  இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது.

  அந்த விமானத்தில் 17 பயணிகள் 2 விமானிகள் உள்ளிட்ட அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.

  விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
தையல்
தொழில்நுட்பம்
ஆன்மிகம்
 மரண அறித்தல்