முருங்கை இலையின் மகத்துவம் அண்மைய ஆராய்ச்சியில் வெளிவந்த புது தகவல்,
 • முருங்கை இலையின் மகத்துவம் அண்மைய ஆராய்ச்சியில் வெளிவந்த புது தகவல்,

  இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். தினம்தினமும் அதிக மக்கள் பாதிக்கப்படும் வியாதிகளின் வரிசையில் புற்றுநோய்தான் முதன்மையான இடத்தில் உள்ளது.

  இதற்காக பல ஆராய்ச்சிகள் இன்றளவும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவருக்கு உணவு என்பது மிகவும் இன்றியமையாததாகும்.

  பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். இதே போன்றுதான் ஒரு அண்மை ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர்.

  மேலும் இதில் அதிக படியான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வாறு முருங்கை இலை புற்றுநோயை குணப்படுத்த உதவும் என்பதை இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
  அண்மை ஆராய்ச்சி

  சில அண்மைய ஆராய்ச்சிகள் முருங்கையில் உள்ள எண்ணற்ற நன்மைகளை கண்டறிந்தனர். அதில் மிக முக்கியமான சிலவற்றை இதுவே…

      கல்லீரலை சுத்தம் செய்யும்.
      நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
      உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும்.
      எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்

  எவ்வாறு புற்றுநோயை குணப்படுத்தும் ..?

  தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300 ml குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது.

  இதில் உள்ள நியாஸிமிஸின் (niazimicin) என்ற மூல பொருள் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கவும், செல்கள் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்கிறது.

  மேலும் இப்போதெல்லாம் முருங்கை இலையை பொடி செய்து அதனை கேப்சியூல் போன்று விற்க தொடங்கி விட்டனர். இது பெரிதும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
சினிமா
உலக சட்டம்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்