பறவைகள் இனத்தையே பாதிக்கும் ட்ரோன்கள் அரசின் எச்சரிக்கை,
 • பறவைகள் இனத்தையே பாதிக்கும் ட்ரோன்கள் அரசின் எச்சரிக்கை,

  ட்ரோன்கள் பறவைகள் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பறவைகள் இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இதனால் ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு பறவைகளுக்கு”மன அழுத்தத்தை” ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  சுவிட்சர்லாந்தில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தொல்லை தராமல் தவிர்ப்பது எப்படி என்பதை விவரிக்கும் புதிய புரோஷர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

  ஒரு காலத்தில் அமைதியாக இருந்த இடங்களில் தற்போது ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ட்ரோன்களால்

  பறவைகள் மற்றும் விலங்குகள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து சுவிஸ் வன உயிரின அமைப்புகளும் ட்ரோன் குழுக்களும் எச்சரித்துள்ளன.

  நேற்று வெளியிடப்பட்ட தகவல் ஒன்றில் Swiss Ornithological Institute in Sempach, the Swiss Hunting and Fishing Association (KWL) மற்றும் the Swiss Federation of Civil Drones ஆகிய அமைப்புகள், பறவைகளும் விலங்குகளும் ட்ரோன்களை அச்சுறுத்தும் விடயமாக கருதலாம் என குறிப்பிட்டுள்ளன.

  தொடர்சியாக மன அழுத்தம் அதிகரித்தால், அவை பறவைகள் மற்றும் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவற்றின் இனப்பெருக்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், இதனால் காலப்போக்கில் அவை அழியும் அபாயகரமான நிலை உருவாகலாம்.

  ட்ரோன் இயக்குபவர்கள் நேரடியாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு அருகே ட்ரோன்களை இயக்கவோ அவற்றை பின் தொடரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

  அதேபோல் காகங்கள் முதலான பறவைகள் ட்ரோன்களை தாக்க முற்பட்டால் உடனடியாக ட்ரோன்களை அங்கிருந்து எடுத்து சென்று விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அதாவது ட்ரோன்களை பறவைகள் துரத்தினால் அவை ட்ரோன்களைக் கண்டு அஞ்சுகின்றன என்று அர்த்தம்.

  அமைதி மண்டலங்கள் என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ட்ரோன்களை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
சிறுவர் உலகம்
உலக சட்டம்
 மரண அறித்தல்