அடுத்தடுத்து கொலையாகும் கருணாவின் ஆட்கள் அடுத்த இலக்கு யார்,
 • அடுத்தடுத்து கொலையாகும் கருணாவின் ஆட்கள் அடுத்த இலக்கு யார்,

  கஞ்சா,களவு மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் சம்மந்தப்பட்ட கருணா குழுவின் கொழும்பு மாவட்ட தொடர்பாளர் ஒருவர் நேற்றைய தினம் இலங்கையின் விசேட புலனாய்வு பிரிவொன்றினால் கொழும்பில்வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

  இதேவேளை இவருடன் இணைந்து கடத்தல்களில் ஈடுபட்டுவரும் வவுனியாவை வதிவிடமாகவும்,கருணாவால் வவுனியாவில் வைத்து கருணா குழுவிற்கான சர்வதேச பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர் கருணாவின் சகாவும், நேற்றைய தினம் கொலையுண்டவருடன் சம்மந்தப்பட்டிருப்பதை மேற்படி அரவிந்தனே தனது முகநூலில் அவருடன் தொலைபேசியில் தான் தொடர்புகொண்ட இருபத்து நாலு மணித்தியாலத்தில் அவரை சுட்டுவிட்டார்கள் எனவும் உறுதிப்படுத்தி தகவலை வெளியிட்டுள்ளார்.

  இந்த அரவிந்தன் என்ற நபர் ஒரு தழிழன் இல்லை எனவும்,இவர் தமிழை ஓரளவு கதைக்க தெரிந்திருப்பதால் இவர் திட்டமிட்டவகையில் அரவிந்தனென்ற தமிழ் புனைபெயருடன் கருணாவால் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருவதாகவும் அறியமுடிகின்றது.

  அத்துடன் இந்த அரவிந்தன் என்ற நபர் கொழும்பில் இயங்கிவருகின்ற பாதாள உலக கும்பலின் முக்கிய உறுப்பினர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

  மேலும் கொழும்பில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நபரே கருணாவின் கொழும்பிற்கான தகவல் தொடர்பாளர் எனவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.

  இவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருப்பதை இலங்கை பொலிசார் உறுதுப்படுத்தியுள்ளதுடன்,இவர் நேற்று கொல்லப்படடுவதற்கு சில தினங்களுக்கு முன்பே சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்ததாகவும் அறியமுடிகின்றது.

  இவரும் பாதாள உலக கும்பலின் உறுப்பினராக இருக்கலாம் எனவும்,இந்த கும்பலுக்குள் எழுந்த முரண்பாடுகளாலோ இல்லையேல் கொள்ளையடிப்புக்களில் எழுந்த பங்கு பிரிவினைகளாலோ இவரை அவர்களே கொன்றிருக்கலாம் என்று இலங்கை பொலிசார் தமது விசேட அறிக்கையில் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.

  இருந்தபோதிலும் கொழும்பை அடுத்து அடுத்த இலக்காக யார் இருக்கலாம் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள் என முக நுால் பக்ககம் ஒன்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
தொழில் நுட்பம்
சரித்திரம்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink