இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா,
 • இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா,

  முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

  அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

  “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

  இந்நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் இது குறித்து விரைந்து செயற்பட வேண்டும்.

  அவர் வெளிநாட்டிற்கு சென்றால் விசாரணைகளுக்கு தடை ஏற்படக் கூடும். எனவே, விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற முன்னர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் விஜயகலா மகேஸ்வரனின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
இலக்கியம்
மங்கையர் மருத்துவம்
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்