மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசர சட்டம்,
  • மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அவசர சட்டம்,

    இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரர் கருத்து தெரிவிக்கையில்,

    ‘போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைக்குள் இருந்து கொண்டே, பெருமளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள்.

    அண்மைய காலங்களாக, பெருந்தொகையான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருள் குற்றங்களால், கொலைகள் இடம்பெற்று வருகின்றன.

    இதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

    ஏற்கனவே போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளவர்களுக்கும் தண்டனையை நிறைவேற்றவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
மங்கையர் மருத்துவம்
தங்க நகை
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink