இந்தியா உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது,
 • இந்தியா உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது,

  2017 ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி இந்தியா உலகின்  ஆறாவது மிகப் பெரிய பொருளாதார நாடாகி உள்ளது. பிரான்சை அது ஏழாவது இடத்திற்கு தள்ளி உள்ளது.

  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஆண்டின் இறுதியில் பிரான்சிற்கு  2.582 டிரில்லின் டாலருக்கு  எதிராக 2.597 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை 2017 முதல் வலுவாக உயர்ந்து உள்ளது.

  134 கோடிக்குக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் உள்ளனர், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக  திகழ்கிறது. அதேசமயம் பிரான்ஸ் மக்கள் 6.7 கோடியாக  உள்ளது.

  இதன் பொருள் என்னவென்றால்,   உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பிரான்சின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது, இது இன்னும் 20 மடங்கு அதிகமாக உள்ளது.

  சர்வதேச நாணய நிதியத்தின்படி,   இந்த ஆண்டின் 7.4% வளர்ச்சி மற்றும் 2019 ல் 7.8% வளர்ச்சியை இந்தியா உருவாக்க திட்டமிட்டுள்ளது, வீட்டுச் செலவினங்களும் வரி சீர்திருத்தங்களும் அதிகரித்துள்ளது. இது உலகின் எதிர்பார்க்கப்பட்ட சராசரியான 3.9% வளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது.

  லண்டனை மையமாகக் கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக ஆராய்ச்சி மையம் மற்றும்  ஆலோசனை நிறுவனம் கூறும் போது  கடந்த ஆண்டு இறுதியில்   மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஆண்டு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்தியா முந்தியது என்றும் 2032 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

  2017 ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியா உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது $ 2.622 டிரில்லியனாக இருந்தது. அமெரிக்கா உலகின் முதல் சிறந்த பொருளாதார நாடாக உள்ளது, தொடர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை உள்ளன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
தையல்
மருத்துவம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink