விடுதலைப் புலிகள் இயக்கத்தை கறிவேப்பிலயாக்கிய தமிழ்அரசியல்வாதிகள்,
 • விடுதலைப் புலிகள் இயக்கத்தை கறிவேப்பிலயாக்கிய தமிழ்அரசியல்வாதிகள்,

  2009 க்குப் பிறகு உருவாகிய தமிழ் அரசியலில் “முன்னாள் போராளிகள்” என்றொரு புதிய சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 வரையும் களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளே இந்தச் சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டனர். (1980 களில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனைபேரும் போராளிகளாகவே கருதப்பட்டனர்).

  போரினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள், இந்தச் சொல்லின் மூலம் ஓய்வு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்த்தப்பட்டது. அதாவது களத்திலிருந்து அகற்றப்பட்டதாக.

  இதற்குப் பிறகு போராட்ட (கால) அரசியற் களத்தில் முதல் நிலையில் இருந்த விடுதலைப்புலிப் போராளிகள், இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் நிலையினர் என்றாக்கப்பட்டனர். அவர்கள் அரசியல் ரீதியாக எதையும் தீர்மானிக்க முடியாது, சமூகத்தில் எத்தகைய செல்வாக்கையும் செலுத்த முடியாது என்றாக்கப்பட்டது.

  அப்படிச் செயற்பட முனைவோர் அரச சார்பானவர்களாகவும் வெளிச்சக்திகளால் கையாளப்படுவோராகவும் சித்தரிக்கப்பட்டனர். அதற்குரிய முறையில் திட்டமிட்டுச் சந்தேகங்களும் உருவாக்கப்பட்டன.

  முன்னர் ஏனைய இயக்கத்தினர் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டனரோ அதே வகையான அடையாளப்படுத்தல் இவர்களுக்கும் நிகழ்ந்தது. இதைச் செய்ததும் செய்து கொண்டிருப்பதும் வேறு யாருமல்ல, இன்றைய தமிழ் அரசியலாளர்களே. தாம் முதல் நிலையைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

  ஆகவே, இரண்டாவது தடவையாகவும் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

  முதற்தோற்கடிப்பு அரசினாலும் சர்வதேச சக்திகளினாலும் நிகழ்ந்தது  என்றால், இரண்டாவது தோற்கடிப்புத் தமிழ் அரசியற் தரப்பினரால் நிகழ்ந்தது, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

  வேடிக்கை என்னவென்றால், இதில் தமிழ்த்தேசியவாதச் சக்திகளும் ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்ற பெருந்தேசியவாதக் கட்சிகளின் தமிழ்ப்பிரதிநிதிகளும் வேறுபாடற்sritharanற நிலையில் சேர்த்தி என்பது.

  எல்லோரும் இன்று “புதிய போராளி”களாகி விட்டனர்.

  இவர்கள் தங்களுடைய அரசியல் தேவைகளுக்கேற்ற வகையில், தம்மைப் புதிய போராளிகளாகக் காட்டுவதற்காகப் புலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், இந்த விசயத்தை மிகக் கவனமாகவும் மிக நுட்பமாகவும் கையாண்டனர். இதன்படி தமது தேவைக்காகப் பயன்படுத்த விளைந்தது, தப்பி, மிஞ்சியிருக்கும் புலிகளை அல்ல. களமாடிய, காயப்பட்டு விழுப்புண்களை ஏற்ற, தியாகங்கள் பல செய்த புலிகளை எல்லாம் புறமொதுக்கி விட்டு, 2009 க்கு முந்தியகாலப் புலிகளையே பயன்படுத்தினர்.

  அதாவது அந்த இயக்கத்தில் போராடி வீழ்ந்த “மாவீரர்”களையும் விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தின் பெயரையும் அந்த இயக்கம் உருவாக்கிய அடையாளங்களையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொணடனர். இன்னும் அப்படியே பயன்படுத்தியும் வருகின்றனர். இதில் இவர்களில் யாரும் கூச்சப்படவோ வெட்கப்படவோ இல்லை. (ஆதாய அரசியலில் இதையெல்லாம் பார்க்க முடியுமா? அப்படிப் பார்த்தால் லாபங்கள் கிடைக்குமா?” என்ற வடிவேலுவின் நகைச்சுவைக் கிண்டலே, அதிலுள்ள உண்மையே நினைவுக்கு வருகிறது).

  இதற்காகச் சிலர் புலிகளின் வாரிசுகள் தாமே என்றனர். சிலர் புலிகளின் ஆதரவாளர்கள் தாம் என்று காட்டமுற்பட்டனர். சிலர் தாம் எப்போதுமே புலிகளின் அபிமானிகள் என்றார்கள். சிலரோ தங்களைத்தான் புலிகள் அங்கீகரித்தனர் என்றனர்.

  இதற்காகப் பிரபாகரனைப் போலப் “போஸ்“ கொடுத்தார் ஒருவர். புலிகளின் மாவீரர் துயிலுமில்லங்களில் போய் நின்றார் இன்னொருவர். புலிகளின் பாடல்களைத் தனது அரசியல் பரப்புரை மேடைகளில் ஒலிக்கச் செய்தார் வேறொருவர். புலிகளின் அரசியல் வாரிசு தானே என்றார் இன்னொரGajendrakumar_Ponnambalamுவர். இப்போது “புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றிருக்கிறார் வேறொருவர். “எங்கள் தலைவரே இன்றைய தேசியத் தலைவர்” என்றது ஒரு அணி. எங்கள் சின்னத்தையே புலிகள் தெரிவு செய்திருந்தனர் என்றது இன்னொரு குழு.

  இப்படியே புலிகளை வைத்து ஒரு மாபெரும் அரசியல் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் போராட்ட அரசியலின் தேவையை மறுக்க முடியாததே. அதை அதற்குரிய முறையில், அதற்குரிய பண்புடனும் குணாம்சத்தோடும் தொடர முடியாதவர்கள், முன்னர் போராடிய சக்தியாகிய புலிகளின் அடையாளத்துடன் தம்மை இணைத்து அடையாளப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

  இதனால் “புலிகள்” என்ற பெயரின் நிழலில் நிற்பதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் படாத பாடுகளைப்படுவது நடைமுறையாகியுள்ளது. சிறிதரன், ஐங்கரநேசன், பசுபதிப்பிள்ளை, சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், அரியநேத்திரன், ரவிகரன், சந்தர்ப்பங்களில் சம்மந்தன் தொடக்கம் அங்கயன் ராமநாதன், விஜயகலா வரை இதில் உள்ளடக்கம். இவர்களுக்கு  புலிகள் இயக்கம் ஊறுகாயாகி விட்டது.

  இப்படியே “புதிய போராளிகள்” என்ற வேஷத்தைப் போட்டுக் கொண்டு அரசியற் கூத்தாடுகின்றனர் இந்தக் “கோமாளிகள்”.

  தங்களுடைய கொள்கையைச் சொல்லி, அதை நடைமுறைப்படுத்தி  மக்களிடத்திலே ஆதரவைப் பெறுவதில்லை இவர்கள். தங்களுடைய செயற்பாடுகளை நிரூபித்து செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சிப்பதுமில்லை. தங்களுடைய அரசியல் திறனையும் சாணக்கியத்தையும் பயன்படுத்தி எதிர்த்தரப்பை, அரசாங்கத்தை முறியடித்து முன்னேறுவதும் இல்லை. பாதிக்கப்பட்ட, பின்தங்கிய நிலையிலிருக்கும் மக்களின் வாழ்க்கையை உயர்த்தி, அதன் மூலம் ஆதரவைப் பெறுவதில்லை.

  பதிலாகப் போராட்டத்திலும் போர்க்களத்திலும் உச்சமான அர்ப்பணிப்புகளைச் செய்த விடுதலைப்புலிகளை “முன்னாள் போராளிகள்” என்றாக்கி விட்டுத் தாம் “புதிய போராளிகள்” ஆகியிருக்கின்றனர். அப்படிப் “புதிய போராளிகள்” ஆகியவர்கள், புதிய அரசியற் களத்தைக் கைப்பற்றி, அதிகாரம் செய்கின்றனர்.  அதிகாரம் கிடைக்காதவர்கள் அதற்காகப் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.sures.pr

  இந்தப் “புதிய போராளிகள்” இதுவரையிலும் போராட்டக்களத்தில் செயற்படாதவர்கள். போரினால் ஏற்பட்ட இழப்புகளையோ, துயரத்தையோ அதனுடைய அனுபவத்தையோ பெறாதவர்கள். ஒரு போதும் தடுப்புக்கோ சிறைக்கோ செல்லாதவர்கள். சனங்களோடு கலந்து வாழாதவர்கள்.

  பதிலாக போராட்டத்திற்கும் போர்க்களத்திற்கும் அப்பால், தமது வாழ்க்கையைக் கட்டமைத்திருந்தவர்கள். 2009 வரை அல்லது அதற்குப் பிறகுகூட அரச உத்தியோகத்திலிருந்தவர்கள். அல்லது உத்தியோகத்திலிருந்து ஓய்வு நிலையைப் பெற்றவர்கள். அல்லது பெரு வணிகத்தில் ஈடுபட்டவர்கள். அதாவது தாமும் தமது குடும்பமும் தமது செல்வாக்கான வாழ்க்கையும் என்றிருந்தவர்கள். பொதுப்பணி, பொதுவாழ்க்கை, அர்ப்பணிப்பு, தியாகம், இழப்பு, துயரம் என்ற எதனோடும் எத்தகைய தொடர்பையும் உறவையும் கொண்டிருக்காதோர்.

  2009 க்குப் பிறகு உருவாகிய பலவீனமான அரசியற் சூழலைப் பயன்படுத்தி, அதற்குள் தம்மைச் சாமர்த்தியமாகப் புகுத்திக் கொண்டனர் இந்தப் “புதிய போராளிகள்”. இதனால்  2009 க்குப் பிறகு முற்று முழுதாக தேர்தல் அரசியலே உருவாகியது.

  இது, இதுவரையிலான போராட்ட அரசியலுக்கு, விடுதலை அரசியலுக்கு மாறானது. எதிரானதாகும். அல்லது அதைப் பலவீனப்படுத்துவதாகும். குறைந்த பட்சம், போருக்குப் பிந்திய அரசியலைக் கூட இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் (புதிய போராளிகள்) முன்னெடுக்கவில்லை.

  போருக்குப் பிந்திய அரசியலானது பாதிக்கப்பட்ட சமூகத்தை மீளமைத்திருக்க வேண்டியது. அப்படிச் செய்திருந்தால் இன்று தமிழ்ச்சமூகம் வலுப்படுப்பட்டிருக்கும். காயங்களை ஆற்றியிருக்கும். தன்னுடைய நிர்க்கதி நிலையை மாற்றியிருக்கும். தொடர்ந்தும் விடுதலை அரசியலை நோக்கித் தளம்பலின்றித் தொடர்ந்திருக்கும்.

  இதற்கு யதார்த்தத்தை உணர்ந்த சிந்தனை வேண்டும். மக்கள் மீதான நேயம் வேண்டும். அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளும் அதற்கான அரசியல் பொறிமுறையும் வேண்டும். தம்மை முழுமையாக மக்களோடு கரைத்து உழைக்க வேண்டும்.

  பிரமுகர் அரசியலில் இதற்கான இடமில்லை. 2009 க்குப் பிறகு உருவாக்கப்பட்டது போராட்ட அரசியலோ விடுதலை அரசியலோ இல்லை. அது முற்று முழுதாகத் தேர்தல் அரசியல். எனவே, தேர்தல் அரசியலுக்குரியவாறு பிரமுகர்கள் களமிறக்கப்பட்டனர். அல்லது பிரமுகர்கள் களமிறங்கினர். இதுவே இன்றைய வீழ்ச்சியும் சீரழிவுமாகும்.vijayakala

  உண்மையில் இவ்வாறு உருவாகியிருக்கக் கூடாது. நீண்ட பெரும்போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் என்பது மிகக் கவனமாகவும் அர்ப்பணிப்புள்ளோரினாலும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். புதிய அரசியற் சிந்தனையுடையோரினால் முன்னெடுக்கப்பட்டிருக் வேண்டும். அவ்வாறானவர்களை இனங்கண்டு தேர்வு செய்திருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து மக்களும் தவறிவிட்டனர். யதார்த்தவாதிகளைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். அதாவது தமக்குரிய அரசியல் தலைமைகளை உருவாக்கவும் அவ்வாறானவற்றை ஆதரிக்கவும் தவறியுள்ளனர்.

  தேர்தல் அரசியலோ மக்கள் அரசியலுக்கு நேர்மாறானவர்களையே உற்பத்தி செய்தது. அது “பிரமுகர் அரசியலாளர்” களையே தேடியது. அவர்களையே நம்பியது. இது ஒரு வகையில் வணிக அரசியலாகியது. உயிரையே அர்ப்பணிக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த, தியாகத்தை முன்னிறுத்திய தமிழ் அரிசியலானது, அதற்கு முற்றியும் மாறான வகையில் பகட்டாளர்களிடம் போய்ச்சேர்ந்தது. அதற்கான முறையில் ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர்களைத் தேடிக்கண்டன.

  வரலாற்றில், வாழ்க்கையில் ஒருவர் எத்தகைய அரசியற் பங்களிப்புகளையும் சமூகப் பணிகளையும் செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்குப் பதிலாக, என்ன பதவியிலிருக்கிறார், அல்லது முன்பு எத்தகைய பதவியிலிருந்தார், எவ்வளவு நிதிப்பலத்தோடிருக்கிறார், என்ன மாதிரியான சாதி, சமூக அடையாளத்தோடிருக்கிறார் என்ற வகையிலேயே ஒவ்வொருவருடைய Profile ம் பார்க்கப்பட்டது.

  இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பளிக்கப்பட்டவர்கள், மிகச் சுலபமாக அரசியல் அதிகாரத்திற்கு வந்தனர். வந்தவுடன் பிரமுகர் முறைமையிலேயே தமிழ் அரசியலைக் கையாளத் தொடங்கினர். இதனால் இன்றைய தமிழ்ச்சமூகத்தின் அரசியலானது, பிரமுகர் அரசியலாக – மக்கள் அரசியலுக்கு அப்பாலானதாக மாறிவிட்டது.

  இது தமிழ்ச்சமூகத்தின் நாற்பது ஆண்டுகாலப் போராட்ட அரசியலின் பெறுமானங்களை எல்லாம் இன்று கீழிறக்கியது. இந்தத் தளம்பலான நிலையிலேயே இன்றைய தமிழ் அரசியல் உள்ளது. இதற்குள்தான் தாமே “புதிய புலிகள்” “புதிய போராளிகள்” என்றெல்லாம் வீறாப்பாகக் கம்பு சுத்துகிறார்கள்.

  “மீண்டும் புலிகள் வரவேண்டும்” என்று கடந்த வாரம் விஜயகலா மகேஸ்வரன் “கம்பு” சுத்தியதும் இந்த அடிப்படையில்தான். இதை விஜயகலாவே நிரூபித்திருக்கிறார். விஜயகலாவின் உரை ஏற்படுத்திய சர்ச்சைக்குப் பிறகு ரஞ்சன் ராமநாயக்க விஜயகலாவுடன் ஏற்படுத்திய தொலைபேசி உரையாடலின்போது விஜயகலாவே இதைப்பற்றிச் சொல்கிறார், இப்படிப் பேசினால்தான் தேர்தலில் வெல்லலாம் என்ற தொனிப்பட. ஜனாதிபதித்தேர்தலில் மைத்திபால சிறிசேன எதிர்த்தரப்பில் நிறுத்தப்படுவார். அதற்குப் போட்டியாக நிறுத்தப்படும் ரணிலுக்கு ஆதரவு வேண்டுமல்லவா. அதற்கான ஆதரவைப் பெறுவதற்காகவே இப்படிப் பேசினேன் என்பதாக.

  இதை ரஞ்சன் கண்டிக்கிறார். நீங்கள் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக – ஆதரவைப் பெறுவதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அது கூடாது. நல்லதல்ல என்று.

  புலிகளைப் பற்றிப் புகழ்ந்துரைத்துப் “புதிய போராளி”யாகிய  விஜயகலா இப்பொழுது “முன்னாள் அமைச்சர்” என்றாகி விட்டார். அரசியல் விளையாட்டு எதிர்பாராத வகையில் வினையாகியிருக்கிறது. விஜயகலாவின் மீது அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவருடைய அமைச்சுப் பதவி பறிபோயிருக்கிறது. அடுத்ததாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அது அவரை விசாரணைக் கூண்டு வரை கொண்டு செல்லக் கூடும். இதனால் எதிர்காலத்தில் விஜயகலாவின் செல்வாக்கும் ஐ.தே.கவிற்கான செல்வாக்கும் தமிழ் மக்களிடத்திலே அதிகரிக்கும். உணர்ச்சிகரமாகவே எதையும் பார்த்துப் பழகிய தமிழ்ச் சூழலில் விஜயகலாவுக்கான வெற்றிப் படிகளாகவே இவையெல்லாம் அமையும். இந்தப் பரபரப்புகள் எல்லாம் விஜயகலாவுக்கான இலவசப் பரப்புரைகளாகவே அமைகின்றன.

  இது ஒன்றும் துயருற்ற மனிதர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கான வழியல்ல. சிலருடைய கல்லாப் பெட்டிகளை நிரப்பிக் கொள்வதற்கான உத்திகளே. தந்திரங்களே ஆகும்.

  இந்த மாயமான்களை நம்பித்தான் இன்னும் தமிழ்ச்சமூகம் பயணிக்கப்போகிறதா? இந்தக் கேள்வியே நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குரியதுமாகும்.

  இந்த “நாடகத்தனத்தை”க் கண்டும் காணாததைப்போலவே பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இவற்றுக்கு இன்னும் முன்னுரிமை அளித்துச் செய்திகளை அறிக்கையிடுகின்றன. இவற்றைக் குறித்து தமிழ்ச்சமூகத்தில் சிந்திக்கக் கூடியவர்கள், புத்திஜீவகள் கூட மறுத்துரைப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை. இவைகளையும் இவர்களையும் தங்களுடைய “கௌரவத்துக்குரிய பிரதிநிதிகளாக” சமூக மேற்தரப்பினர் கூடக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது அபத்தமாகும். சரிவின் பாதையாகும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஜோதிடம்
மரண அறிவித்தல்
சிறுவர் உலகம்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort