புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரின் பகிரங்க அறிக்கை,
 • புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரின் பகிரங்க அறிக்கை,

  கடந்த 05-07-2018.அன்று வடக்கு கிழக்கில் இடம் பெற்ற கரும் புலிகள் தின அஞ்சலி நிகழ்வின் பின்  தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும்  இனவாத அறிக்கைகளுக்கு பதிலாக  இந்த அறிக்கையைப் பதிவிடுகிறேன்.

  தற்போது தெற்கில் இருந்து இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துக்களை பகிரங்கப்படுத்தி மீண்டும் ஒரு தமிழ் தமிழ் சிங்கள இனமோதலை  உருவாக்கி தற்போதைய நல்லிணக்க அரசின் செயல் திட்டங்களை நிலைகுலைய வைப்பதும் தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேகா.விமல் வீரவங்கச போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.

  நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள் இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர் கெடும் நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் .மேலும் மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை தெற்க்கில் உள்ள சிங்கள மக்கள்தான் பதில் கூறவேண்டும்

  மேலும் மேலும் எங்களை சட்ட ஒழுங்கை சீர் குலைப்பவர்கள் பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள் என்று தொடர்ந்தும் இவர்கள் கூறுவார்களானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் திம்புமுதல் ஜெனிவாவரை 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்ட அனைவருமே பயங்கரவாதிகள் தானே அவர்களையும் கைது செய்ய வேண்டுமே.

  நானும் எனது கட்சியின் உறுப்பினர்களும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம் பெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன் அதனால் ஜனநாயக ரீதியான  அரசியலில் களமிறங்கியுள்ளோம் என்பதை பகிரங்கமாக நாட்டுமக்கள் அனைவருக்கும் பகிரங்கப் படுத்துகின்றேன்.

  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரின் பகிரங்க அறிக்கை, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரின் பகிரங்க அறிக்கை,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
அரசியல் கட்டுரைகள்
இலங்கை சட்டம்