காதலனை வெட்டி கொன்ற காதலி,
 • காதலனை வெட்டி கொன்ற காதலி,

  சாத்தானின் உருவ அமைப்போடு காதலன் உருவ அமைப்பு ஒத்து போனதால், அவனை துண்டு துண்டாக வெட்டி காதலி கொலை செய்துள்ளார் .

  ரஷ்யாவில் உள்ள ஒர்யோல் எனும் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது காதலனை கொன்று சாத்தானுக்கு அர்ப்பணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ரஷ்யவை சேர்ந்தவர் அனஸ்தேசியா ஒனிகினா என்பவர் தனது வீட்டில் வைத்து தனது காதலரான முன்னாள் போலீஸ் அதிகாரி டிமிட்ரி சிங்கேவிச் (24) என்பவரை பாலியல் உறவின்போதே வெட்டி கொன்றார்.

  பின்னர் காதலனை கொன்ற பின் அவனது பிறப்புறுப்பை அறுத்தும், பல விரல்களை வெட்டியும், கன்னங்களை நறுக்கியும் மிக கொடூரமான முறையில் காதலனின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜின் பிரீசர் பகுதியில் பாதி உறுப்புகளை வைத்திருந்தார். மீதியை குப்பை தொட்டியில் போட்டுள்ளார்.

  ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் தனது குற்றத்தை ஒப்பு கொள்ளாத ஒனிகினா அதன் பின் தான்தான் கொலை செய்ததாக ஒப்பு கொண்டார்.

  இவ்வளவு கொடூரமாக கொலை செய்ததற்கான காரணம் கேட்ட போது சாத்தானின் உருவ அமைப்போடு டிமிட்ரியின் உருவ அமைப்பு ஒத்து போனதால் அதே முறையில் கொல்ல நினைத்ததாக கூறியிருக்கிறார். சாத்தான் விரல்கள் போல டிமிட்ரியின் விரல்களை துண்டித்ததாக கூறினார்.

  இந்த கொலை பற்றி அறிந்த சில மதவாதிகள் கடந்த பௌர்ணமி அன்று டிமிட்ரி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

  இந்த கொலை சம்பந்தமாக தற்போது குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒனிகினா உளவியல் பரிசோதனையில் உள்ளார். இந்த கொலைக்கு அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது வேறு சிலர் இதற்கு அவருக்கு உதவி செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்க படுகிறது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இந்திய சட்டம்
சினிமா
வீடியோ
 மரண அறித்தல்