11 பேர் தற்­கொலை சாமி­யா­ருக்கு வலைவீச்சு,
 • 11 பேர் தற்­கொலை சாமி­யா­ருக்கு வலைவீச்சு,

  டில்­லியில் 11 பேர் மர்­ம­மாக இறந்த விட­யத்தில் சாமியார் ஒரு­வ­ருக்கு தொடர்பிருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. பொலிஸார் அந்த சாமி­யா­ருக்கு தற்­போது வலை விரித்­துள்­ளனர்.

  டில்லி புராரி பகு­தியில்  ஒரு வீட்­டி­லி­ருந்து 11 சட­லங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அவ் வீட்டில் பொலிஸார் மேற்­கொண்ட  சோத­னையில்  கடி­தங்கள், நாட் குறிப்­புகள் என்­பன கைப்­பற்­றப்­பட்­டன.

  எப்­படி தற்­கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று அக் குறிப்­புகளில் உள்­ளது. ஏதோ ஒரு மத சடங்­குக்­காக இவர்கள் இறந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­ப­டு­கி­றது. இதை வைத்து பொலிஸார் தீவி­ர­மாக விசா­ரித்து வரு­கி­ன்றனர்.

  இம் மர்ம மர­ணங்­களின்   பிரேத பரி­சோ­தனை முடி­வுகள் தற்­போது வெளி­யாகி உள்­ளன. அதன்­படி இவர்கள் கொலை செய்­யப்­பட்­ட­தற்கு வாய்ப்­புகள் மிகவும் குறைவு என்றும் தற்­கொலை செய்­தி­ருக்­கவே வாய்ப்­புகள் அதிகம் என்றும் பொலிஸார் கூறு­கி­ன்றனர்.

  அவ் வீட்டில் பொலிஸார் நடத்­திய சோத­னையில், துணி வைக்கும் இடத்தில் கைபேசி ஒன்று “சைலன்ட் மோட்” இல் இருந்­துள்­ளது. அதை சுவருடன் “டேப்” போட்டு ஒட்டி வைத்து இருந்­துள்­ளனர். இதற்கும் கூட, என்ன காரணம் என்று பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர். அதன்­படி, இந்த முக்தி அடையும் சடங்­குக்கு கை­பேசி  ஆகாது. அதை பக்­கத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு சாமியார் சொல்லியிருக்­கிறார். அக் கைபேசி மூலம் பல தக­வல்கள்  பொலி­ஸாரால் கண்­டுபிடிக்­கப்­பட்­டுள்­ளன. அக் கைபேசி உரை­யா­டலின் படி ஒரு  சாமி­யா­ரிடம் இக் குடும்ப உறுப்­பி­னர்கள் அடிக்­கடி தொலை­பே­சியில் பேசியுள்ளனர். அக் கைபேசி உரை­யா­டல்கள்  அனைத்தும் தற்­போது கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

  இந்­நி­லையில், தற்­கொலை செய்து கொண்­ட­வர்கள் குடும்­பத்­துக்கும் காடா பாபா என்ற மந்­தி­ர­வாதி ஒரு­வ­ருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்­தமை  விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. அவ்­வப்­போது அம் மந்­தி­ர­வாதி குடும்ப உறுப்­பி­னர்­களை அழைத்துச் சென்று ஆல­ம­ரத்தில் பூஜை நடத்­தி­யதும் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

  ஒரு­வேளை இம் மந்­தி­ர­வாதி, அக் குடும்ப உறுப்­பி­னர்கள் 11 பேரையும் மூளைச்­ச­லவை செய்து தற்­கொ­லைக்குத் தூண்­டி­யி­ருக்­கலாம் என்ற கோணத்­திலும் பொலிஸார் விசா­ரித்து வரு­கின்­றனர். வீட்டிலிருந்து கைப்­பற்­றப்­பட்ட நாட்குறிப்பிலும் ஆல­ம­ரத்தை வழி­ப­டு­வது குறித்து குறிப்­புகள் எழு­தப்­பட்­டுள்­ளன.

  ஆல­ம­ரத்தில் விழு­துகள் தொங்­கு­வ­துபோல் வீட்டில் அனை­வரின் உடல்­களும் தொங்­கின. மேலும், அந்த நாட்குறிப்பில் “கடவுள் ஆல­மரம் போன்­றவர். நாம் விழு­துகள் போல் இருக்க வேண்டும்” என்றிருந்த குறிப்­பு­க­ளையும் இவர்கள் விழு­துகள் போல் தூக்­குப்­போட்டுத் தொங்­கி­ய­தையும் பொலிஸார் ஒப்­பிட்டுப் பார்த்து விசா­ர­ணையைத் தொடங்­கி­யுள்­ளனர்.

  இதை­ய­டுத்து தலை­ம­றை­வாக இருக்கும் மந்­தி­ர­வாதி காடா பாபாவைத் தேடும் முயற்­சியில் பொலிஸார் இறங்­கி­யுள்­ளனர்.

  அங்கு கிடைத்த நாட்குறிப்பில் மிக முக்­கி­ய­மான விடயமொன்று இருந்­துள்­ளது. அதில், “நீங்கள் அனைவரும் மிகவும் நல்ல பூஜை செய்து கட­வு­ளுடன் ஐக்கியம் ஆனவர்கள். உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள். ஏதாவது தவறாக நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப் பாற்றுவார்” என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக நாட்குறிப்பில் எழுதப்பட் டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
வீடியோ
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சட்டம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort