மூட நம்பிக்கை தலைநகரத்தையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை,
 • மூட நம்பிக்கை தலைநகரத்தையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை,

  மூட நம்பிக்கையில் சொர்க்கத்துக்குச் செல்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தச் சம்பவம் இந்தியா டில்லியின் வடபகுதியில் உள்ள சாந்த் நகரில் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

  டில்லியின் வடக்குப்பகுதியில் சாந்த் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பவனேஷ் அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தினரும் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.இதில் பவேஷ் பலசரக்கு கடையும், லலித் பாட்டியா பிளைவுட் கடையும் நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் கடை திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சென்று வீட்டில் பார்த்த போது, அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

  இதுகுறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் வீட்டில் நீண்டநேரம் ஆய்வு செய்து, உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

  தற்கொலை செய்து கொண்டதில் வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி(வயது77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார்.

  மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கி இருந்தனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ்(வயது50) லலித் பாட்டியா(45) மகள் பிரதிபா(வயது57). பவனேஷ் மனைவி சவிதா(வயது48) சவிதாவின் மகள் மீனு(வயது23) நிதி(25) துருவ்(15). லலித் பாட்டியாவின் மனைவி டினா(42). இவரின் 15வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33). இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. நாராயண் தேவியைத் தவிர அனைவரும் தூக்குப்போட்டு இறந்தனர்.

  தற்கொலை செய்து கொண்ட 11 பேரில் 9 பேரின் கரங்கள் மட்டும் கட்டப்பட்டு இருந்தன. லலித் பவனேஷ் கரங்கள் மட்டும் கட்டப்படவில்லை. அந்த வீட்டில் வயது முதிர்ந்தவரான நாராயண் தேவியின் உடல் தரையில் படுக்கவைக்கப்பட்டு இருந்தது. அவரின் கண்கள், கால்கள் கட்டப்பட்டு, காதில் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது.

  இதேபோலவே அனைவரின் கண்களும் துணிகள் கட்டப்பட்டு இருந்தன. வாயில் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டு கைகள், கால்கள் கட்டப்பட்டு இருந்தன. ஒரு பெரிய போர்வை கிழிக்கப்பட்டு, அதில் அனைவரின் முகமும் சுற்றப்பட்டு இருந்தது. உடற்கூறு ஆய்வில் ஒருவர் கூட வலுக்கட்டாயமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான தடயம் ஏதும் இல்லை.

  லலித் பவனேஷ் கைகள் கட்டப்படாததால், அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு தாங்களும் இறந்திருக்கலாம். ஏனென்றால் இருவரின் கைகள் மட்டும் கட்டப்படவில்லை. உடலில் கைத்தடம், காயங்கள், நகக்கீரல்கள் என எதுவும் யார் உடலிலும் இல்லை என்பதால், இதை கொலை என்று சந்தேகிக்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

  நாங்கள் வீடுமுழுவதும் நடத்திய தீவிர தேடுதலில் பல தகவல்கள் கிடைத்தன. இந்த குடும்பத்தினர் வித்தியாசமான மூட நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையை இறைவனிடம் ஒப்படைத்துவிடுவது என்ற ஒற்றை வார்த்தையை நம்பி இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு டயரியில் இந்தக் குறிப்பு இருந்தது.

  மேலும், வீட்டில் ஒரு அறையில் சிறிய அளவிலான கோயில் இருந்துள்ளது. அந்தக் கோயிலில் தினந்தோறும் பூசைகள் செய்துள்ளனர். இந்த உடல் அழியும், ஆனால் ஆன்மா அழியாது என்று டயரியில் பலபக்கங்களில் எழுதப்பட்டுள்ளது.

  சொர்க்கத்தை அடையும் முயற்சி என்ற அடிப்படையில் இவர்கள் அனைவரும் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்தே இதற்கான முயற்சியிலும்இ தங்களைத் தயார்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

  தற்கொலை செய்யும் ஏற்படும் வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே வாய், கண்களை காதுகளை மூடிக்கொண்டுள்ளனர். தற்கொலை செய்யும் முன் தொலைப்பேசி, செல்போன் அழைப்புகள் வரக்கூடாது என்பதற்காக செல்போன்கள் அனைத்தையும் மொத்தமாக ஒரு இடத்தில் வைத்துள்ளனர். மேலும், சத்தங்கள் ஏதும் கேட்கக்கூடாது என்பதற்காக அனைவரின் காதுகளிலும் பஞ்சு வைக்கப்பட்டு, முகம் துணியால் மூடப்பட்டுள்ளது.

  அனைவரும் கடவுளைச் சந்திக்கப் போகிறோம் என்று அந்த டயரியில் எழுதப்பட்டு இருப்பதால், இது திட்டமிட்டு நடந்துள்ளது எனச் சந்தேகிக்கிறோம்.

  கண்காணிப்பு கமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததில் கடைசியாக லலித் தனது வீட்டு நாயை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துள்ளார். அதன்பின் வீட்டுக்குள் யாரும் வரவில்லை. வீட்டில் இருந்த பொருள்கள், பணம் நகைகள் அனைத்தும் அப்படியே இருந்தன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
விளையாட்டு செய்தி
வீடியோ
விவசாயத் தகவல்கள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort