ராஜபக்ஷர்களை காப்பாற்றுவது யார் அம்பலமான தகவல்,
 • ராஜபக்ஷர்களை காப்பாற்றுவது யார் அம்பலமான தகவல்,

  கடந்த காலத்தில் இடம் பெற்ற முக்கிய கொலைகள் தொடர்பிலான நீதி அல்லது குற்றவாளிகளை அடையாளப்படுத்தல் போன்ற விடயங்கள் இலங்கையில் மர்மமாகவே தொடர்கின்றது.

  இந்த நிலையில் நெடுநாட்களாக இழுபறியாக தொடர்ந்து வருகின்ற பிரபல றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனை கொலை செய்தது ராஜபக்ஷர்களே என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

  இன்று கொழும்பு – பம்பலப்பிடியவில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்தத் தகவலை வெளிப்படுத்தினார்.

  மேலும், வசீமைக் கொன்றது ராஜபக்ஷர்களே என்பதை எங்கு வேண்டுமானாலும் நான் சொல்லத் தயார் எவர் மீதும் எனக்கு அச்சமில்லை எனக் குறிப்பிட்ட ரஞ்சன், ராபக்ஷர்களே என்பது என்னைத் தவிர பலருக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

  வசீமுடன் றக்பி விளையாடியது யார் என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். அதே போன்று ராஜபக்ஷர்களைத் தவிர வேறு யாரும் வசீமுடன் பகைமைக் கொள்ளவில்லை எனவும் ரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

  வசீமின் கொலையில் சிசிரிவி ஆதாரங்கள் சிக்கியுள்ளன, மேலும் தொலைபேசி ஆதாரங்கள் சிக்கியுள்ளன இவை அனைத்தின் மூலமும் கொலையாளி யார் என்பது அம்பலமாகியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முனையும் போது கைது தடையினை முன்கூட்டியே பெற்றுக் கொண்டு கைதுகளில் இருந்து தப்பிக் கொள்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார்.

  அதேபோன்று, கொலைகள் செய்தவர்களையும், அளுத்கம பகுதியில் அட்டூழியங்களை புரிந்தவர்களையும் கடந்த காலத்தை மறந்து விட்டு முஸ்லிம் மக்கள் பாராட்டுகின்றார்கள் எனவும், வாழ்க என கோஷங்களை எழுப்பி வருவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
சிறுவர் உலகம்
மங்கையர் பகுதி
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்