உற்சாகத்தில் திவாகரன்: உற்றுநோக்கும் தினகரன்,
 • உற்சாகத்தில் திவாகரன்: உற்றுநோக்கும் தினகரன்,

  திவாகரன், வரும் 10-ம் தேதி மன்னார்குடியில் தனக்கான கட்சிப் பெயர், கொடி, சின்னம் ஆகிவற்றை அறிமுகப்படுத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, அந்தச் சமயத்தில் தினகரனும் தொடர்ந்து மூன்று நாள்கள் மன்னார்குடியிலேயே தங்கி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்.  அதனால், இப்போதே பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி.

  தினகரன்- திவாகரன்

  திவாகரனுக்கும்  தினகரனுக்கும் இடையே எழுந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மன்னார்குடியில், அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவோம் என்று  அதற்கான கட்சி அலுவலகத்தைக் கடந்த மாதம் திறந்தார் திவாகரன். இப்போது, வரும் 10-ம் தேதி அம்மா அணியை தனிக் கட்சியாக அறிவித்து, அதற்கான கொடி மற்றும் சின்னத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறார். அன்றைய தினத்திலேயே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கட்சிக் கொடியை ஏற்ற இருக்கிறார்கள் திவாகரன் ஆதரவாளர்கள். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, திவாகரனின் திட்டத்தை முறியடிக்கும் விதமாக அவர் ஆரம்பிக்கும் தனிக் கட்சியை செல்லாக் காசாக்கும் முயற்சியில் தினகரன் மன்னார்குடியிலேயே தொடர்ந்து மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதனால், உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது மன்னார்குடி.

  இதுகுறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ”இருவருக்கும் பெரிய  மோதல் ஏற்பட்ட சமயத்தில், முக்கிய உறவினர்கள் சிலர் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.

  ஆனால் அவை முடியாமல் போக,  இரு தரப்பும் அடுத்தடுத்த நகர்வைச் செய்துகொண்டிருந்தனர். அதன் அடிப்படையில்தான் இப்போது கட்சிப் பெயர், கொடி, அதற்கான சின்னம் ஆகியவற்றை வரும் 10-ம் தேதி  திவாகரன் அறிமுகப்படுத்துகிறார். அவர் அறிமுகப்படுத்தும் கொடியில், அண்ணா என்கிற பெயர் நிச்சயமாக இருக்கும்.

  கொடியில் வரும் சின்னம்தான் ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதாவது, அ.தி.மு.க கொடியில் உள்ள வண்ணம் அப்படியே இருக்கும். அதில், மேலிருந்து வரிசையாக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் ஒவ்வொரு நிறத்திலும் ஒருவர் படம் இருப்பதுபோல முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  இது, அரசியலில் யாரும் செய்யாத ஒன்று என திவாகரன் கூறிவருகிறாராம். மேலும், திவாகரனுக்கு ஜாதகப்படி இனிமேல் எல்லாம் நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதாலும் கட்டம் கரெக்டாக இருப்பதாலும்  கூடுதல் உற்சாகத்தோடு அனைத்தையும் செய்துவருகிறார்.

  25 வருஷமா பின்னாடி இருந்து  மறைமுக அரசியல் செய்தவர், இப்ப முன்னாடி நின்று வெளிப்படையாகச் செய்கிறார். எல்லோருக்கும், அவர் பின்னால் யாரும் இல்லாததுபோல தோன்றும். எந்தப் பிடியும் இல்லாமல் இது போன்ற செயல்களில் எல்லாம் இறங்க மாட்டார்” என்கின்றனர் நம்பிக்கையுடன்.

  திவாகரனின் ஒவ்வொரு மூவையும் உன்னிப்பாகக் கவனித்துவரும் தினகரன், இதுகுறித்துக் கடந்த ஆறாம் தேதி சசிகலாவிடம்  ஆலோசனை செய்தார். அப்போது, திவாகரன் கட்சி, கொடி அறிமுகப்படுத்துவது தொடர்பாகப் பேசப்பட்டிருக்கிறது. ‘இதை முறியடிக்கும் விதமாக, நான் மூன்று நாள்கள் மன்னார்குடியிலேயே தங்க இருக்கிறேன்’ என்றிருக்கிறார் தினகரன். அதற்கு சசிகலா, என் பேச்சை யார்தான் கேட்டு நடக்கிறீர்கள்? எதையாவது செய்துகொள்” எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம்.

  ”வரும் 9-ம் தேதியே  மன்னார்குடி வரும் தினகரன், அங்குள்ள அவருக்கு சொந்தமான மன்னை  நாராயணசாமி நகர் வீட்டிலேயே தங்குகிறார். புதுமனைப் புகுவிழா, திருமணம், இப்தார் நோன்பு திறப்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். தினகரன் ஆதரவாளர்கள், 10-ம் தேதி மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். அவர்கள், அன்றைய தினத்தில் கூட்டம் நடத்தினால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும் என கூறி அனுமதி மறுத்துவிட்டனர். ஆளும் தரப்பின் ஆசிப் பார்வை திவாகரன் பக்கம் இருக்கு. அதனால்தான் எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை” என்கிறார்கள்.

  ”திவாகரன் கட்சிப் பெயரை அறிவிக்கும் தினத்தில், மீடியாவின் முழுக் கவனமும் அவர் பக்கம் இருக்கும். நம் பக்கம் இருக்கும் ஆதரவாளர்கள் சிலர் அவர் பக்கம் செல்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. நான் மன்னார்குடியில் தங்கினால், மீடியாவின் கவனம்  என்மீதும் திரும்பும். இதன்மூலம், திவாகரனின் இந்தச் செயல்பாடு முழுமை பெறாமலும்,  பெரிய வெளிச்சம் கிடைக்காமலும் செய்யலாம் என்பதே தினகரனின்  திட்டம்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.8

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
இலங்கை சட்டம்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort