தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு,
 • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு,

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

  ஐகோர்ட் உத்தரவை அடுத்து உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடைசியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்தோணி செல்வராஜின் உடல் 13-வது உடலாக அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  கடந்த மாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்த 6 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர் டாக்டர் வினோத் சவுத்ரி தலைமையில், நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

  பிரேத பரிசோதனையின் போது உறவினர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனர். மணிராஜ், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், ஜான்சி, உசிலம்பட்டி ஜெயராமன் என 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்தோணி செல்வராஜ் உடலை மட்டும் அவரது குடும்பத்தினர் இன்று பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

   இதனையடுத்து அவரது உடல் பரிசோதனைக்கு பின்னர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அந்தோணி செல்வராஜின் உறவினர்கள் அவரது உடலை பெற்று சென்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
இந்திய சட்டம்
வினோத நிகழ்வுகள்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink