எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - 67 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை,
 • எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - 67 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை,

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது.

  அவ்வகையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.

  இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஆயுள் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட உள்ள 67 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி இந்த 67 பேரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.

  அதன்படி, முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனைகளும் இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் மறுவாழ்விற்காக அனைவருக்கும் பெட்ரோல் பங்குகளில் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்க சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியில் சேருவதற்கு ஆர்வம் இருந்தால் பின்னர் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  பிந்திய செய்திகள்,
  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 1,500 கைதிகள் விடுதலை ஆகிறார்கள்,
  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது.

  சட்டசபையிலும் இதுபற்றி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி பேசி இருந்தனர்.

  இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சிறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளின் விவரங்களை அரசு பட்டியல் எடுத்து வைத்துள்ளது.

  60 வயதுக்கு மேல் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் ஆகியோரது நன்னடத்தை விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

  அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுவிப்பது போல் இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

  இதற்கான அறிவிப்பு இன்று மாலை வரும் என தெரிகிறது. இதன் அடிப்படையில் சுமார் 1,500 கைதிகள் 25-ந்தேதி விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இதில் முக்கியமான கைதிகள் உள்ள வேலூர் மத்திய சிறையில் 185 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாகும் தகுதியில் உள்ளனர்.

  இதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் பெயர்களும் உள்ளது. ஆனால் இவர்கள் விடுதலையாவார்களா? அல்லது வழக்கம் போல் இவர்களை தவிர்த்து மற்றவர்கள் விடுதலை ஆவார்களா? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
ஆன்மிகம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இலக்கியம்
 மரண அறித்தல்