300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்,
 • 300 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்,

  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் 300 ஆண்டுகள் பழமையான கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கப்பலில் வரலாறு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
   
  கொலம்பியா கடல் பகுதியில் ரெமஸ் 6000 என்ற ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்தது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும்.
   
  இந்த கப்பல் முழுக்க தங்கம், வெள்ளி, வைரம் இருந்துள்ளது. இதன் இதன் மதிப்பு ரூ. 1.156 லட்சம் கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழையது என்பதால் சாதாரண தொகையைவிட அதிக விலைக்கு விற்பனை ஆகும்.
   
  தென் அமெரிக்காவில் இருந்து ஸ்பெயினின் ஐந்தாவது மன்னர், பிளிப்பிற்கு இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது இந்த நகைகளுக்கு தென் அமெரிக்கவும், ஸ்பெயினும் உரிமை கோரியுள்ளது.
   
  அதே சமயம் தங்கள் நாட்டு கடல் பகுதியில் கிடைத்ததால் விதிப்படி இது எங்கள் சொத்துதான் என்று கூறியுள்ளது கொலம்பியா. இந்த நகைகள் எந்த நாட்டிற்கு செல்லும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
தொழில்நுட்பம்
விவசாயத் தகவல்கள்
சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink