வட கொரிய ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா,
  • வட கொரிய ஜனாதிபதி தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா,

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் தங்கவுள்ள விடுதியில் ஒரு இரவுக்கான கட்டணம் 6 ஆயிரம் டொலர் எனக் கூறப்படுகிறது. அறைக்கான மொத்த செலவையும் அமெரிக்காவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எதிர்வரும் 12ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளார்.

    இதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கிம் ஜாங் உன் தங்கவிருக்கும் விடுதியின் செலவு மொத்தவும் அமெரிக்காவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வடகொரியா கோரிக்கை வைத்துள்ளது.வடகொரியாவின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்த நிலையில், அணுஆயுத ஒழிப்புக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வரும் பன்னாட்டு அமைப்பான ஐ-கான் கிம் ஜாங் உன் தங்கும் விடுதிக் கட்டணங்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரின்போது, வடகொரியாவில் இருந்து பங்கேற்ற வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கான மொத்த செலவையும் தென் கொரியாவே ஏற்றுக் கொண்டது.

    குறித்த நிகழ்வுக்காக சுமார் 2.6 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாக தென் கொரியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
சாதனையாளர்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்